வெறும் 7 நாளில் முடி நீளமா வளர வேம்பாளம்பட்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க...அப்புறம் நரைக்கு குட் பை சொல்லுங்க...

முடி உதிர்தல் தடுக்கவும், முடி நீளமாக வளரவும் உதவும் வேம்பாளம்பட்டை. வேம்பாளம்பட்டை எண்ணெய்யை எவ்வாறு தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


வேம்பாளம் பட்டை என்பது ஒரு வகை மரத்தின் பட்டையாகும். இந்த பட்டை ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சினைகள் வரை என எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் ஒரு அற்புதமான மூலிகை பட்டை ஆகும். இதனை ஆங்கிலத்தின் ரத்தன் ஜோட் (Ratan Jot) என்று கூறுவர். இந்த வேம்பாளம்பட்டை எண்ணெய் முடி நீளமாக வளரவும், நரையைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே, முடி வளர வேம்பாளம்பட்டை ஹேர் ஆயில் தயாரிப்பு முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருள்கள்:

Latest Videos

வேம்பாளம் பட்டை - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - 200 மில்லி

செய்முறை:
வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். எண்ணெயை நேரடியாக சூடுபடுத்தாமல், டபுள் பாயிலிங் முறையில் சூடுப்படுத்தவும். அதாவது, கீழே ஓரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்கு மேல்  எண்ணெய் உள்ள பாத்திரத்தை வைத்து சூடுபடுத்த வேண்டும். எண்ணெய்யுடன் வேம்பாளம்பட்டையும் சேர்த்து சூடு செய்து கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடாக பட்டையிலுள்ள நிறம் எண்ணெயில் இறங்கும். பின் எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு, அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கிவிடுங்கள். பின்னர் எண்ணெய் நன்கு ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டவும். இப்போது வேம்பாளம்பட்டை எண்ணெய் ரெடி. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன் சூரிய ஒளியில் 3 நாட்கள் வைத்து எடுக்க வேண்டும். அதன்பின்னரே இதனை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த எண்ணெய்யை நீங்கள் வழக்கமாக தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது போல தினமும் தேய்க்கலாம். குறிப்பாக நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து பிறகு குளித்தால் நல்லது.

இதையும் படிங்க:  முடி நீளமாக அடர்த்தியாக வேண்டுமா? அப்போ உணவுகளை சாப்பிடுங்க...!!!

வேம்பாளம்பட்டை எண்ணெய் நன்மைகள்:

முடி வலிமையாக இருக்க:
வேம்பாளம்பட்டை எண்ணெய் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், இது முடியை வலிமையாக்கி, முடியின் பல்வேறு அடுக்குகளுக்குள், சென்று முடிக்குத் தேவையான ஊட்டத்தைக் கொடுக்கிறது.
 
முடி உதிர்தலைத் தடுக்க:
இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், மாய்ஸ்ச்சரைஸரையும் கொடுக்கிறது. எனவே, இது வேர்க்கால்களை உறுதியாக்கி முடி உதிர்தலைத் தடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது:
வேம்பாளம்பட்டை எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்க்கால்களுக்குப் போதிய அளவு நீர்ச்சத்தைக் கொடுத்து முடியை பலப்படுத்துகிறது. மேலும் இது முடி உடைவதையும் தடுப்பதுமட்டுமல்லாமல், முடி வேகமாக வளரத் தூண்டுகிறது.

இதையும் படிங்க:  முடி உதிர்தல் கட்டுக்குள் வர.. குளிக்கும் முன்பு இந்த 1 விஷயம் மட்டும் கண்டிப்பா பண்ணுங்க!!

வேம்பாளம் பட்டையின் பயன்கள்:
வேம்பாளம் பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. இது இரைப்பைக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள 
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காயத்தை குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் தீக்காயங்கள், தடிப்புகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

click me!