முகத்தில் மங்கு இருக்கா? அலட்சியம் செய்யாதீங்க... இதை மட்டும் செய்யுங்க இனி திரும்பவே வராது..!!

By Kalai Selvi  |  First Published Jun 28, 2023, 10:02 AM IST

உங்கள் முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும் இதனை போக்க இதனை நீக்க சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.


சிலருக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி காரணமாக அவர்கள் பலவித தோல் நோய்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் மங்கு. கன்னத்தில் கருப்பு நிறத்தில் வரக்கூடிய இதனை மெலஸ்மா என்று அழைப்பர். மங்கு வருவதே நீங்கள் முன்கூட்டியே அறிந்தால் அதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம். அந்த வகையில் மங்கு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை சரி செய்வதற்கான வழிகளையும் குறித்து காணலாம்.

மங்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பொதுவாக இது கண்ணம் மூக்கு நிச்சயம் மற்றும் முழங்கால் பகுதியில் வரும் குறிப்பாக இது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்படும்.
  • அதிக சூரிய ஒளி நம் முகத்தில் படுவதால் இந்நோய் வருவதற்கான முக்கிய காரணம் ஆகும்.
  • பொதுவாக இது பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.
  • அதுபோலவே ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மொனோபாஸ் இது போன்ற காரணத்தினால் மங்கு வரக்கூடும்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு என்ன செய்யும் தெரியுமா?

வீட்டிலிருந்தவாறு இயற்கை முறையில் மங்குவை குணமாக்கும் மருத்துவ குறிப்புகள் இதோ:

தேவையான பொருட்கள்:

  • பால் 
  • எலுமிச்சை 

செய்முறை:

  • முதலில் உங்கள் முகத்தை நன்கு தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கு உள்ள இடத்தை நன்கு கழுவ வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பச்சைப் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் எலுமிச்சை ஒன்றை எடுத்து அதை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • வெட்டி வைத்த எலுமிச்சை ஒன்றினை எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து பாலில் கலக்க வேண்டும்.
  • நன்கு கலந்தவுடன் அதனை மங்கு உள்ள இடத்தில் பூச வேண்டும்.
  • இவ்வாறு நீங்கள் தொடர்ந்து மூன்று நாள் பயன்படுத்தி வந்தால் உங்கள் முகத்தில் உள்ள மங்கு மறைவதை நீங்கள் காண்பீர்கள்.
click me!