மந்தமான சருமமா.. அப்போ இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க..!

By Kalai SelviFirst Published Apr 19, 2023, 10:19 AM IST
Highlights

மந்தமான சருமத்துக்கு மஞ்சள், தயிர், தேன் கலந்த கலவையை பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறும்.
 

கோடைகாலத்தில் சருமம் பாதிக்கப்படாமலும், ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஹோம்மேட் பேஸ் பேக் பற்றி இங்கு காணலாம். இந்த பேஸ் பேக் உங்களது முகத்திற்கு க்ளென்சிங் மற்றும் பிரைட்னிங் தரும். மேலும் சருமத்தை பிரகாசமாக வைக்கும்.


தேவையான பொருட்கள்:

 முல்தானி மட்டி / கடலை மாவு- 2 டீஸ்பூன்

 மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி

 தயிர் -1 டீஸ்பூன்

தேன் - 1 தேக்கரண்டி 

பயன்படுத்தும் முறை:

ஒரு கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு கலவையாக கலக்கவும். இதனுடன் உலர்ந்த ரோஜா இதழ்களையும் சேர்க்கலாம். முகத்தை நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே இந்த பேஸ்டை பயன்படுத்த வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து,குளிர்ந்த் நீரால் முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். இந்த பேக்கை முகம், கழுத்து மற்றும் கைகளில் வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!

 

இதன் நன்மைகள்:

மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. மேலும் இது சருமத்தை பிரகாசமாக்கவும், மந்தமான தோற்றமுடைய சருமத்தையும் புதுப்பிக்க செய்கிறது.

முல்தானி மட்டி தோலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது சருமத்திற்கு இயற்கையான எண்ணெய்களைச் சேர்த்து, பளபளப்பாக வைக்க உதவுகிறது.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை உருக்குகிறது. இது சருமத்தின் நுண்ணுயிரியான தோலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை சமப்படுத்தவும் உதவுகிறது.

தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும் இது கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இயற்கையான பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, சருமத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
 

click me!