ஒரே ஒரு எலுமிச்சையில் குதிகால் வெடிப்புக்கு நிரந்தர தீர்வு!! இப்படி பண்ணுங்க

Published : Jun 20, 2025, 02:54 PM IST
cracked heels

சுருக்கம்

குதிகால் வெடிப்பு நீங்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

குதிகாலில் வெடிப்பு வருவது பொதுவானது. அனைத்து வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, தைராய்டு பாதிப்பு, தடிமனான தோல் அலர்ஜி, உடல் எடை அதிகரிப்பு, காலணிகள் அணியாமல் இருப்பது, கரடு முரடான பாதையில் நடப்பது, பாதங்களை சுத்தமாக தேய்த்து குளிக்காமல் இருப்பது, குதிகாலில் அழுக்கு சேர்வது, அதிகப்படியான பித்தம், பொருத்தமில்லாத காலணிகளை அணிவது போன்றவை பாதத்தில் வெடிப்புகள் வர காரணங்கள் ஆகும். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட நாம் பாதத்திற்கு கொடுப்பதில்லை. அது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாத வெடிப்பை நாம் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்கவில்லை என்றால் பிறகு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி நாம் குதிகால் வெடிப்பை சரியாக பராமரிக்க விட்டால் கடுமையான வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இரத்தப்போக்கும் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் பாத வெடிப்பை போக்க எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தும் முறை:

1. முதலில் ஒரு வாலியில் சூடான நீரை நிரப்பி அதில் உங்களது கால்களை சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். முன்னதாக ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வாஸ்லைன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை வெடித்திருக்கும் பாதத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள் பிறகு மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவ வேண்டும். வேண்டுமானால், எலுமிச்சை சாறுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

2. வெறும் எலுமிச்சம் பழத்தை பித்த விடுப்பில் தேய்க்க வேண்டும். பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு காலை தண்ணீரில் கழுவ வேண்டும் இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

3. ஒரு சிறிய வழியில் வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த நீரில் உங்களது பாதங்களை சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து பாதங்களை ஸ்க்ரப்பர் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு பாதங்களை கழுவி சுத்தமான துண்டால் துடைக்க வேண்டும். இந்த முறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாகும்.

4. ஒரு பக்கெட்டில் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பான நீரை நிரப்ப வேண்டும். அதில் சிறிதளவு கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். வேண்டுமானால் டீ ட்ரீ ஆயில், ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த கலவையில் பாதங்களை வைத்து சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு ஒரு மென்மையான துண்டால் பாதத்தை தொடக்க வேண்டும் இறுதியாக மாய்ஸ்சரைசர் தடவுங்கள். கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு பாதங்களில் உள்ள பாத விடுப்பு பாதத்தை பட்டு போல மென்மையாக மாற்றும்.

குறிப்பு:

- தினமும் இந்த முறையை பின்பற்றி வந்தால் குதிகள் வெடிப்பு விரைவில் குணமாகும்.

- அதுபோல பாதங்களை எப்போதுமே ஈரமாக வைத்துக் கொள்ள மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க