நம் அன்றாட பரபரப்பான வாழ்க்கை முறையில் சோர்ந்துபோகும் நமது முகத்தை எவ்வாறு பொலிவுற செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான சருமத்திற்கு நீர்ச்சத்து அவசியம். பழங்கள், காய்கறிகள் சருமப் பொலிவை மேம்படுத்தும். ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். ஐஸ் கட்டிகள், நீராவிப் பாத், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சோப்பைத் தவிர்த்து, பேஸ் வாஷ் அல்லது இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். பாசிப்பயறு, கஸ்தூரி மஞ்சள், கற்றாழை, கிளிசரின் போன்றவை சருமப் பரிசிற்கு உதவும்.
தற்போதைய பரப்பான அன்றாட வாழ்க்கை முறையில் நம்மால் நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது ஒவ்வொருவருக்கும் கடினமான ஒன்றாக உள்ளது. அதற்காக நமது ஆரோக்கியத்தை விடமுடியுமா என்ன? சருமத்தின் தோற்றம் ஒருவரின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும்.
பலரது அன்றாட வாழ்க்கையில் சவாலாக இருப்பது முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் எவ்வாறு வைப்பது, முகத்தை பொலிவுடன் வைப்பது போன்றவை தான். இயற்கையான வழிகளில் சருமத்தை எவ்வாறு பொலிவுடனும், வறட்சி இல்லாமலும் வைப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.
சரும குறிப்புகள்
சருமம் பொலிவுடன் இருக்க ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
சருமம் எப்போதும் வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
தினமும் உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் சேர்ப்பதால் சருமம் ஆராக்கியத்துடன் இருக்கும்.
நீர்சத்துள்ள காய்கறி பழங்களை உணவில் அதிகளவில் சேர்ப்பதால் சருமம் பளபளக்கும்.
இயன்றவரை சருமத்தில் ரசாயன பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை சார்ந்த பொருட்களை உபயோகிப்பதன் மூலம் தோலில் தேவையற்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.
ஐஸ்கட்டிகளை வைத்து தினமும் தேய்ப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்களின் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
காலையில் எழுந்தவுடனும், இரவில் தூங்குவதற்கு முன்பும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
நீராவி பாத் என்னும் ஆவி பிடிக்கும் முறையை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள துளைகள் திறந்து அழுக்குகள் வெளியில் வரும். பிறகு முகத்தை தக்காளி, சிறிது வெள்ளை சர்க்கரை வைத்து ஸ்கிரப் செய்வதன் மூலம் முகம் பளபளக்கும்.
மருத்துவரின் பரிந்துரைபடி சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துவது நல்லது. வெளியில் செல்லும் போது தவறாமல் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும்.
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஒவ்வொரு முறையும் சுத்தமான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்திற்கு சோப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாற்றாக பேஸ் வாஷ் அல்லது இயற்கை பொருட்களை முகத்திற்கு போடுவது நன்மை தரும்.
முகம் பளபளக்க பேஷ் ஃபேக்
பாசிபயறு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை பொடியாக்கி இந்த கலவையை தயிரில் கலந்து முகத்திற்கு போட்டுவர முகத்தில இருக்கும் பருக்கள் குறைவதை பார்க்கலாம்.
கற்றாழை இலை வைத்து முகத்தை 5 நிமிடம் இடைவிடாது தேய்ப்பதன் மூலம் முகம் ஈரத்தன்மையுடன் பொலிவாக இருக்கும்.
கிளிசரின், உருளைகிழங்கு சாறு, ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இந்த செய்முறையை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்றிருக்கும்.