சரும ஆரோக்கியத்தை காக்கும் ரோஸ் வாட்டர்...அறிந்ததும்... அறியாததும்..!!

By Pani Monisha  |  First Published Jan 13, 2023, 10:47 AM IST

ரோஸ் வாட்டர் என்பது ரோஸ் மற்றும் தண்ணீரின் கலவையாகும். ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து ரோஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை சமநிலைப்படுத்துவதால், சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 


வறண்ட சருமம் இன்று பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்சனை. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. எப்பொழுதும் சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைஸ் செய்வதன் மூலம் வறண்ட சருமத்தை ஓரளவு தவிர்க்கலாம். வறண்ட சரும பிரச்சனையை தடுக்க ரோஸ் வாட்டர் சிறந்தது.

பெயர் குறிப்பிடுவது போல, ரோஸ் வாட்டர் என்பது ரோஸ் மற்றும் தண்ணீரின் கலவையாகும். ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து ரோஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை சமநிலைப்படுத்துவதால், சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Latest Videos

undefined

ரோஸ் வாட்டரும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ரோஸ் வாட்டர் வயதானதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் மருந்தாக உள்ளது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இடம்பெற்றுள்ளன. ரோஸ் வாட்டரின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான். இந்த பண்புகள் பல உள் மற்றும் வெளிப்புற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. 

ரோஸ் வாட்டர் வலுவான ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோய்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. ரோஸ் வாட்டர் பெரும்பாலும் இயற்கை மற்றும் மூலிகை சிகிச்சை முறைகளில் கூட சேர்க்கப்படுகிறது. அதன் ஆண்டிசெப்டிக் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கண் நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 

இதையும் படிங்க: Swami Vivekananda Jayanti 2023: துன்பம் இல்லா வாழ்க்கைக்கு விவேகானந்தர் சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்!

ரோஜா இதழ்கள் மற்றும் ரோஜா எண்ணெயில் பல சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் இடம்பெற்றுள்ளன. இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சுருக்கங்களை குறைக்க ரோஸ் வாட்டர் காஸ்மெட்டிக் பொருட்களில் கூட பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோலில் ஏற்படும் அரிப்பு, முகப்பரு, தோல் அழற்சி உள்ளிட்ட பிரச்னைகளை போக்க உதவுகிறது. 

முகத்தில் துவாரங்களில் அடைபட்ட துளைகளில் குவிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் வெந்நீரை ஊற்றவும். தண்ணீர் நன்றாக ஆறிய வரை கிண்ணத்தை அருகில் வைக்கவும். இதற்குப் பிறகு வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

இப்படி செய்வதன் மூலம் ரோஜாவின் பண்புகள் தண்ணீரில் கலந்து சருமத்தை மென்மையாக்குகிறது. ரோஸ் வாட்டரை ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதை தினசரி பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். 

இதையும் படிங்க: எண்டிங்கே இல்லாமல் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பெருங்காயம்..!!


 

click me!