நீங்கள் ஃபேஷியல் செய்ய சரியான வயது இதுதான்..!!

By Pani MonishaFirst Published Jan 12, 2023, 5:24 PM IST
Highlights

இன்று பலரும் மேனி அழகில் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக பெண்கள் ஃபேஷியல், திரட்னிங் உள்ளிட்ட அழகுக்கலை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். 
 

இந்தியாவின் பெரும்பாலான அழகுக்கலை நிலையங்களில் முகத்தில் மசாஜ் செய்வது, அழுக்குகளை நன்றாக துடைத்து எடுப்பது மற்றும் வாடிக்கையாளரின் தேர்வுக்கு ஏற்ப பேக் போட்டு நீக்குவது உள்ளிட்ட செயல்பாடுகளை கொண்டதாகவே ஃபேஷியல் உள்ளது. பெண்களுக்கு டீ ஏன் ஹார்மோன்கள் 13 வயதில் இருந்து செயல்படத் துவங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்போது முகப்பரு, கண்களைச் சுற்றி கருவளையம் போன்றவை தோன்றும். இது பெண்களுக்கு பதின் பருவத்திற்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. அப்போது தான் சரும பராமரிப்பு மீது கவனம் செலுத்துவதற்கான தேவை உருவாகிறது. எனினும் எந்த வயதில் இருந்து ஃபேஷியல் உள்ளிட்ட அழகு பராமரிப்பில் கவனம் செலுத்தலாம் என்கிற கேள்வி பலரிடையே நிலவுகிறது. அதற்கு விடை கூறும் விதமாக இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

உங்கள் சருமத்தை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். அதற்கு ஃபேஷியல் உறுதுணை செய்யும். ஃபேஷியல் உங்கள் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு வயதாகும் போது சருமம் வறண்டு, மீள் தன்மையை இழக்கும். அதனால் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் ஃபேஷியல் செய்வதன் மூலம், முகத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது. 

சருமம் ஈரப்பதம் அற்றவர்கள் கவனத்துக்கு

ஒவ்வொரு நாளும் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமாக்குதல் ஆகியவற்றின் மூலம் கவனித்துக் கொண்டால், நீங்கள் வயதான பின்னர் ஆண்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். தோல் எப்பொழுதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். எனவே அதைப் பாதுகாக்க இது ஒரு சிறந்த வழியாகும். 

இதையும் படிங்க: Honey for skin: பொங்கல் அன்று பொலிவான சருமம் வேண்டுமா? ஒரு தக்காளியும் தேனும் போதும் இதை ட்ரை பண்ணுங்க!

30 பிளஸ் வயதில் வளர்சிதை மாற்றம்

தங்கள் சருமத்தின் மீது அலட்சியம் காட்டுபவர்களுக்கு சீக்கரமே பாதிப்புகள் ஏற்படத் துவங்கும். குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், விரைவாக முதுமையடையத் துவங்கும். அதற்கு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாறுதல் முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். அதையடுத்து சருமத்தில் முதுமைக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கும். 

உங்களுக்கு ஸ்ரெட்ஸ் இருக்கக்கூடாது

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்கு எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறீர்கள்? எவ்வளவு நேரம் ஓய்வுநேரம் எடுக்கிறீர்கள்? உங்களுடைய மனநிலையில் ஏற்படும் மாற்றம்? உள்ளிட்டவற்றை பொறுத்து தான் சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆனால் இந்த நடைமுறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், முதலில் சருமம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். ஒருவேளை நீங்கள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் இருந்தால், 20 வயதிலேயே முதுமைத் தோற்றம் வந்துவிடும்.

முதுமைத் தோற்றம் ஏற்படாமல் இருக்க வழிகள்

வயதாகும்போது சருமத்தில் எண்ணெய் சுரப்பு குறைந்துபோகும். அதை தடுப்பதற்கு ஆண்டி ஏஜிங் க்ரீம்கள் பயன்படுத்தலாம். பொதுவாக ஆண்டி ஏஜிங் க்ரீம்களில் ஹைலூரோனிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. வழக்கமான சன்ஸ்கிரீன் பயன்பாடு, ஆரோக்கியமான உணவு மற்றும் நிதானமான வாழ்க்கை முறை ஆகியவை காலப்போக்கில் இளமையாக இருக்க உதவும். 

இதையும் படிங்க: Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

click me!