பெடிக்யூர் பண்றப்ப இந்த சின்ன தப்ப மட்டும் பண்ணாதீங்க!!

Published : May 16, 2025, 06:06 PM IST
Pedicure at home

சுருக்கம்

பெடிக்யூர் செய்வது நல்லது என்றாலும் அதை பாதுகாப்பாகவும், தொற்று இல்லாததாகவும் செய்யுங்கள். இல்லையெனில் காலை இழக்க நேரிடும்.

Pedicure Can Cause Fungal Infection In Your Feet : பாதத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். இதற்காக பலர் பார்லருக்கு சென்று பெடிக்யூர் (pedicure) செய்வார்கள். பெடிக்யூர் செய்வது பாதத்திற்கு நல்லது என்றாலும் அதை பாதுகாப்புடன் செய்தால் இன்னும் சிறப்பு. ஏனெனில் பெடிக்யூர் செய்யும் போது பாதத்தில் தொற்றுக்கள் வர வய்ப்புள்ளது தெரியுமா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை.

இது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா பார்லரில் பெடிக்யூர் செய்து கொண்ட பெண் ஒருவருக்கு பாதத்தில் பூஞ்சை தொற்று ஏற்பட்டது. அதன் விளைவாக அந்தப் பெண் தனது கால்களை இழக்க நேரிட்டது. அதன் பிறகு அந்த பார்லர் மீது வழக்கு போடப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பெண் இருக்கு 14.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இப்படி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவரது கால் திரும்பி வந்து விடுமா? எனவே நீங்கள் பெடிக்யூர் செய்யும் முன் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில் அழகை விட ஆரோக்கியம் தான் ரொம்பவே முக்கியம்.

பெடிக்யூர் செய்வதால் பூஞ்சை தொற்று பரவுவது எப்படி?

பார்லருக்கு பலரும் வந்து போவார்கள். அவர்களில் சிலருக்கு தோல் தடிப்பு, பூஞ்சை தொற்றுகள், தோல் நோய்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதுமட்டுமின்றி பாத பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், தண்ணீர் தொட்டி, தூண்டுகள் முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அதன் மூலம் ஒருவருக்கு இருக்கும் சரும பிரச்சனை மற்றவருக்கு எளிதாக பரவி விடும். பூஞ்சை தொற்றானது பாதங்கள் மற்றும் நகங்களில் மட்டுமல்ல ரத்தம் மூலம் பரவும் அபாயம் உள்ளது.

இவற்றில் கவனமாக இருங்கள்;

1. தண்ணீர் கொள்கலனின் தூய்மை - ஒரே தண்ணீர் கொள்கலன் பயன்படுத்துவார்கள். அதை முறையாக சுத்தம் செய்ய தவறினால் அந்த நீரில் கிருமிகள் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

2. பாதத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் - நகங்களை வெட்டுதல் இறந்த செல்களை அகற்றுதல் போன்ற அனைத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினாலோ அல்லது முறையாக சுத்தம் செய்யாமல் இருந்தாலும் அதை நீங்கள் பயன்படுத்தினால் ஆபத்து.

3. கையுறை அவசியம் - உங்களது பாதத்தை சுத்தம் செய்யும் பெண் கையில் அல்லது கைகளை சுத்தம் செய்யவில்லை என்றாலோ பெடிக்யூர் செய்யாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.

4. மாய்ஸ்சரைசர் - மேலே சொன்ன விஷயங்களை தவிர உங்களது பாதத்தில் தடவும் மாய்ஸ்சரைசரில் தொற்றுகள் இருந்தால் உங்களுக்கும் அது பரவ வாய்ப்பு உள்ளது.

பார்லர் போகும் முன் இவற்றை நினைவில் கொள்:

- நீங்கள் பார்லருக்கு சென்று பெடிக்யூர் செய்ய விரும்பினால், உங்களுடன் நெயில் கட்டர், ஃபைலர், பிரஷ், தண்ணிர் தொட்டி, துண்டு மற்றும் மாய்ஸ்ரைசர் எடுத்துச் செல்லுங்கள். வேண்டுமானால் பார்லரில் இருக்கும் use and throw பொருட்களை பயன்படுத்தலாம்.

- ஸ்க்ரப்பர்கள், பிளேடுகள் அல்லது கூர்மையான கருவிகளை பயன்படுத்தும் போதும் சில சமயத்தில் கவனக்குறைவால் வெட்டுக்காயங்கள் ஏற்படும். இதனால் தொற்று எளிதாக வரும்.

- உங்களது கால்களில் கொப்புளங்கள், சொறி அல்லது புண்கள் இருந்தால் பெடிக்யூர் செய்யாமல் இருப்பது தான் நல்லது. இல்லையெனில் வேறு ஒருவரின் தொற்று உங்களது உடலில் எளிதில் பரவி விடும்.

- புதிய பார்லருக்கு செல்லும் முன் ஆன்லைனில் அது குறித்த கமெண்ட்ஸை படியுங்கள் அல்லது அந்த பார்லர் குறித்த உங்களுக்கு தெரிந்தவரிடம் கேளுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க