
Kanpur Hair Transplant Case : உத்திர பிரதேசத்தை சேர்ந்த இன்ஜினியர் உட்பட இரண்டு பேர் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு இருவரும் மரணமடைந்தனர். இப்போது இரு குடும்பத்தினரும் நீதி கேட்டு மன்றாடி வருகின்றனர்.
முதல் மரணம்:
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் மயங்கட்டியார் நவம்பர் 18-ம் தேதி 2023 ஆம் அன்று முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களிலேயே வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மறுநாள் அதாவது நவம்பர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இரண்டாவது மரணம்:
அதே மருத்துவமனையில் மார்ச் 14ஆம் தேதி அன்று வினித் துபை என்ற மற்றொரு இன்ஜினியர் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை செய்த சிறிது நேரத்திற்கு பிறகு அவரும் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி ஜெயா தூபே கான்பூர் காவல்துறையில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் தற்போது மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முறையான உரிமம் மற்றும் அனுபவம் இல்லாத மருத்துவமனை:
உயிரிழுந்த இருவருக்கும் டாக்டர் அனுஷ்கா திவாரி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முறையான உரிமம் அல்லது அனுபவம் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வசதி ஏதும் இல்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த டாக்டர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்தனர். மேலும் சிசி டிவி காட்சிகள் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மருத்துவமனையை மூடி உள்ளனர் மேலும் இதுபோன்ற அலட்சியம் மற்ற நோயாளிகளிடம் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.