Lady Finger Face Pack :"வெண்டைக்காய்" சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகின் பொக்கிஷத்திற்கும் கூட...எப்படி தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Oct 3, 2023, 3:58 PM IST

Lady Finger Face Pack : முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த பேக்கைப் பயன்படுத்தலாம். இதன் பயன்பாடு முக தோலை மேம்படுத்துவதோடு, முகத்தில் உள்ள புள்ளிகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் அழகுசாதனப் பொருட்களை விட இந்த ஃபேஸ் பேக் பல மடங்கு பயனுள்ளதாக இருக்கும்.


லேடிஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படும் வெண்டைக்காயை பலர் விரும்பி சாப்பிடுவது உண்டு. வெண்டைக்காயின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் இது முகப்பருவை போக்கவும், முகத்தில் உள்ள கறைகளை நீக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் தாமிரம், சோடியம், சல்பர், கால்சியம், புரதம், அயோடின், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ பி சி ஆகியவை உள்ளது.

முகப்பருவை நீக்க முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மருந்துகள் அழகு சாதன பொருட்கள் அல்லது மற்ற கிரீம்களை முயற்சித்தும் உங்களுக்கு உங்கள் முக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து முகப்பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.. அந்த வகையில் இத்தொகுப்பில் நாம் வெண்டைக்காய் வைத்து 2 வகையான ஃபேஸ் பேக் பற்றி பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: 'இந்த' பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஒருபோதும் காயை சாப்பிடாதீங்க.. !!

1 - ஃபேஸ் பேக் :
இந்த facebook செய்யும் முதலில் 10 - 12 வெண்டைக்காய்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்து, தண்ணீர் சேர்க்காமல் அவற்றை மிக்ஸியில் அரைத்து கெட்டியாக பேஸ்ட் போல் எடுத்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 - 20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவவும்.

இதையும் படிங்க:  Lady Finger: வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால்...உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..

2 - ஃபேஸ் பேக் :
இதற்கு முதலில் 2 முதல் 3 வெண்டைக்காயை எடுத்து அதை சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக வெட்ட கொள்ளுங்கள். பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின் தீயை அணைத்து ஆறவிட வேண்டும். அவை நன்கு ஆறியபின் பேஸ்ட் போல ஆக்கி அதில் 2 முதல் 3 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்பு கலந்து முகத்தில் தடவவும். இந்த பேக் முகத்தில் நன்கு  உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த ஃபேஸ் பேக்கின் நன்மைகள்:
எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக் சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக சருமத்தின் பொலிவை திரும்பக் கொண்டு வருவதில் பயனுள்ளதாக இருக்கிறது. அதே நேரத்தில் முகப்பரு, வறண்ட சருமம் மற்றும் தோல் தொற்றுப் போன்று அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

click me!