முகப்பருவுக்கு இதை அரைச்சி போடுங்க..'பேரன்பு' வைஷ்ணவியின் அழகு ரகசியம் இதுதானாம்..!!

By Kalai SelviFirst Published Sep 28, 2023, 12:35 PM IST
Highlights

பேரன்பு சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழியின் தோல் மற்றும் முடி பராமரிப்பு ரகசியம் இங்கே..

நடிகை வைஷ்ணவி அருள்மொழி, விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து பிரபலமானவர். அவரது நீண்ட கூந்தலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளன. இந்நிலையில் வைஷ்ணவி ஒருமுறை say swag என்ற ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் தனது முடி மற்றும் தோல் பராமரிப்பு பற்றி பகிர்ந்து கொண்டார்.

அதில், "நான் எப்போதும் என் தலைமுடியை எண்ணெயால் மசாஜ் செய்கிறேன். அதுபோல் என் அம்மா,  செக்கில் வாங்கிய எண்ணெய்யில் செம்பருத்தி, கற்றாழை, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம், மருதாணி சேர்த்து நல்லா கறுப்பு நிறமாக வரும் வரை காய்ச்சுவாங்க. அதை இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி பயன்படுத்தலாம். இது தான் நான் என் தலை முடி பராமரிபுக்கு செய்வது.

இதையும் படிங்க: பருத்திவீரன் முத்தழகா இது... ஃபேண்ட் ஷர்ட்டில் பேஷன் குயினாக மாறிய பிரியாமணியின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ

தோல் பராமரிப்புக்கு கற்றாழை மற்றும் பப்பாளி முகத்தில் பூசுவேன். அரிசி மாவு, மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக்கைத் தடவும்போது டேன் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். உங்களுக்கு பரு வந்தால், அதை கிள்ள வேண்டாம். கற்றாழையை தினமும் முகத்தில் தடவலாம். எப்போதும் நீரேற்றமாக இருக்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். எனக்கு முகப்பரு வந்தால், என் அம்மா கிராம்பு அரைத்து, தேனில் கலந்து கொடுப்பாங்க. நான் மஞ்சள் பயன்படுத்துவேன். இது எல்லாம் எனக்கு நல்ல வேலை செய்யுது.

இதையும் படிங்க: “வயசானாலும் இவங்கள மாதிரி யங்கா இருக்கலாம் போல..” வனிதாவின் அக்கா அனிதா ஃபாலோ பண்ணும் ரெசிபி இதோ..

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை உச்சந்தலையில் தடவவும். இதனுடன் தயிரையும் சேர்க்கலாம். பேஸ்ட்டை முடியின் முனைகள் வரை தடவவும். முனைகள் பிளவுபட்டிருந்தால், அவற்றை அடிக்கடி ஒழுங்கமைக்கவும். இதேபோல், கற்றாழையை உங்கள் தலைமுடிக்கு தடவலாம்.. உங்கள் தலைமுடியை அதிகமாக ஸ்ட்ரைட்னிங் பண்ண வேண்டாம். கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டில்ல வச்சி, அதை  அடிக்கடி ஸ்கால்ப்பில், முடியின் வேர்களில் தெளிக்கவும். எல்லாவற்றையும் விட சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது முக்கியம். தூக்கமின்மை முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது" என்கிறார் வைஷ்ணவி.

click me!