பெண்களே உங்கள் கண்களுக்கு மேக்கப் போடும் போது இதை கொஞ்சம் கவனிங்க!

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 3:52 PM IST
Highlights

இன்றைய நவீன உலகில் திரைப் பிரபலங்கள் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைவருக்கும் மேக்கப் என்பது மிகவும் சகஜமான ஒன்று. பெண்களின் முகத் தோற்றத்திற்கு அசத்தலான பொலிவை அளிக்கிறது கண்கள். மேக்கப் போடும் போது கண்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் பார்வைத் திறனில் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே, கண்களில் மேக்கப் செய்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.

மேக்கப்

மேக்கப் போடும் போது மஸ்காரா மற்றும் ஐலைனர் போன்றவை எதிர்பாராவிதமாக கண்ணின் கருவிழிப் படலத்தில் பட்டுவிட்டால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்போலவே, ஒவ்வாமை பிரச்னை இருந்தால் கவனமாக செயல்பட வேண்டியதும் அவசியம். உறங்குவதற்கு முன்பாக மேக்கப்பை கட்டாயமாக கலைத்து விட வேண்டும். இல்லையெனில் கண்களில் எரிச்சல், சிவத்தல், வீக்கம் அல்லது தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வாங்குவதற்கு முன்பாக, காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தவறுதலான மேக்கப் காரணமாக, ஒரு சிலருக்கு இளஞ்சிவப்பு கண் என்பது பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. மேக்கப் பொருட்கள் அனைத்து பெரும்பாலும் பாதுகாப்பு அம்சங்களுடன் தான் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், காலாவதியான பொருட்கள் அல்லது தரம் குறைவாக உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது, வெண்படலம் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. அசுத்தமாக உள்ள கான்டாக்ட் லென்ஸ்கள் எரிச்சல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றது. லென்சில் சிறிதளவு மேக்கப் பொருட்கள் பட்டாலும், ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும்.

சத்தான தினை அரிசி தக்காளி சாதம்! செய்யலாம் வாங்க!

உங்களுடைய மேக்கப் பொருட்களை வேறொருவருடன் பகிரும் போது கண் எரிச்சல் மற்றும் வெண்படலம் போன்றவைக்கான பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், முடிந்தளவுக்கு மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், குறைந்தப்பட்சம் 4 மாதங்களுக்கு ஒரு முறை கண்கள் தொடர்பான மேக்கப் பொருட்களை மாற்றுவது அவசியம் என தோல் மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.
காரில் செல்லும் போது எதிர்பாராத விதத்தில், கருவிழிப்படலத்தில் மேக்கப் பொருட்கள் படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, காரில் பயணம் செய்யும் போது மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுதானியங்கள் நமக்கு அவசியம் தேவை!

கண்களில் எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், உடனே அனைத்து மேக்கப் பொருட்களையும் மாற்றி விட வேண்டும். இதனால், பாக்டீரியா தொற்று மேலும் பரவுவதை தவிர்க்கலாம். இரவு உறங்கச் செல்லும் முன்பாக கண் மேக்கப் அனைத்தையும் நீக்கி விட்டு, தண்ணீரில் சுத்தப்படுத்தி விட வேண்டும். அப்போது, சிறிது பாதாம், தேங்காய் எண்ணெயை தொட்டோ அல்லது பாலில் ஊறவைத்த காட்டன் துணியையோ பயன்படுத்தலாம்.

click me!