Health Tips: அந்த ஒரு ஜூஸ் தான் என்ன கலர் ஆக்கிடுச்சு... ரகசியத்தை வெளியிட்ட மைனா நந்தினி

By Ganesh Perumal  |  First Published Nov 28, 2021, 10:00 PM IST

சினிமாவில் நடிக்க வந்த போது டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த நடிகை மைனா நந்தினி, தற்போது கலராகி உள்ளார். அதன் சீக்ரெட்டை தனது யூடியூப் சேனல் மூலம் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 


‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சின்னத்திரையை விட்டு சிறிது காலம் விலகி இருந்த மைனா நந்தினி, மீண்டும் நடிக்க வந்தார். சக நடிகரான யோகேஸ்வரனுடன் காதல் மலர அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்தாண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகனுக்கு துருவன் என பெயரிட்டுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வந்த போது டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த நடிகை மைனா நந்தினி, தற்போது கலராகி உள்ளார். அதன் சீக்ரெட்டை தனது யூடியூப் சேனல் மூலம் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

அதன்படி ABC ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், பீட்ருட், கேரட் ஜூஸ் தான் நந்தினியின் கலர் மாற்றத்திற்கு முக்கிய காரணமாம். ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றுடன் இஞ்சி, புதினா, எலுமிச்சை சாறு உள்ளிட்டவை சேர்த்து நன்கு அரைத்து வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமாம் நிச்சயம் முகம் பொலிவு பெறும் என்கிறார் நந்தினி.

click me!