
How to Use Tomato Yogurt and Potato for Glowing Skin : தற்போது பெண்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் என்னவென்றால் தங்களது முகம் எப்போதும் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்காக அவர்கள் பலவிதமான அழகு சாதனம் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைனில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது, பார்லருக்கு சென்று பேஷியல் செய்வது போன்ற பல விதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவை அனைத்திலும் ரசாயனங்கள் இருப்பதால் அவை சருமத்தை சேதப்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், வீட்டு வைத்தியம் தான் சிறந்த தீர்வு. ஆம், வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துவது உங்களது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும். அப்படியொரு வீட்டு வைத்திய முறையை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முகத்தை இயற்கையாக பளபளப்பாக ஃபேஸ் பேக்:
தக்காளி, தயிர் மற்றும் உருளைக்கிழங்கு இவை மூன்றும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இவை முகத்தில் இருக்கும் நிறமி, பருக்கள் தழும்புகள் கரும்புள்ளிகளை நீக்கி முகத்திற்கு இயற்கையான பொலிவை கொடுக்கும்.
முகத்திற்கு தக்காளி நன்மைகள்:
தக்காளியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் மற்றும் நிறம் மாறிய சருமத்தை சரி செய்யும். தக்காளி சாறு சருமத்தை மென்மையாக்கும் மற்றும் அதன் நிறத்தை மாற்றும். எனவே கோடையில் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க தக்காளி உங்களுக்கு பெரிதும் உதவும்.
முகத்திற்கு தயிர் நன்மைகள்:
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் இறந்த அடுக்கை அகற்றி புதிய செல்கள் தோன்ற ஊக்குவிக்கும். மேலும் இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கும். இதனால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். எனவே, முகத்திற்கு தயிரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
முகத்திற்கு உருளைக்கிழங்கு நன்மைகள்:
உருளைக்கிழங்கு இயற்கையான பிளீச்சிங் தன்மையுடையது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளது. இவை இரண்டும் சருமத்தை நிறத்தை ஒளிரச் செய்யும், கரும்புள்ளிகளை அகற்றும் மாற்றும் சருமத்தின் நிறத்தை மாற்றும். உருளைக்கிழங்கு சாறு சருமத்தை குளிர்வித்து, புத்துணர்ச்சியாகும் மற்றும் பளபளப்பாக்கும்.
தயிர் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?
உருளைக்கிழங்கு சாறு - 1 ஸ்பூன் தக்காளி சாறு - 1 ஸ்பூன் தயிர் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
மேலே சொன்ன மூன்றையும் ஒன்றாக கலந்து உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு முகத்தை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.