Fenugreek: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

By Dinesh TG  |  First Published Oct 31, 2022, 4:35 PM IST

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடியின் வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவுகிறது.


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பவை. அதில் வெந்தயத்திற்கு தனியிடம் உண்டு. வெந்தயம் நமக்கு பல வகைகளில் ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடியின் வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவுகிறது.

ஆரோக்கியத்தை அளிக்கும் வெந்தயம்

Tap to resize

Latest Videos

undefined

நாம் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம், பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதிலும் குறிப்பாக, வெந்தயம் முடி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகிறது. மேலும், வெந்தய விதைகளில் வைட்டமின்கள் A, C மற்றும் K அதிகளவில் நிறைந்துள்ளது.

அளவில் சிறிதாக இருந்தாலும், வெந்தயத்தின் பயன்களோ அளப்பரியது. இந்த சின்னஞ்சிறு விதையில், முடிக்குத் தேவைப்படும் புரதங்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதனைப் பயன்படுத்தி முடி உதிர்வை தடுக்கலாம். மேலும், முடியை அடர்த்தியாகவும் வளரச் செய்கிறது. அவ்வகையில் இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு வெந்தயம்

தலைமுடியின் வளர்ச்சிக்கு வெந்தயத்தை 3 விதமாக பயன்படுத்தலாம். அதன் செய்முறைகளை இப்போது காண்போம்.

1. முதலில், வெந்தயத்தை பொடியாக அரைத்துக் கொள்ள வேணடும். இதனுடன் பிசைந்த வாழைப்பழம் மற்றும் அரை ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவிக் கொள்ளலாம். லேசான ஷாம்பூவால் உங்களின் தலைமுடியைக் கழுவுவதற்கு முன்பாக, கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு இந்த ஹேர் மாஸ்க்கை அப்படியே தலையில் வைத்திருக்க வேண்டும்.

நீர் சத்து அதிகமுள்ள பீர்க்கங்காயை குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா?அப்போ இப்படி செய்து தாங்க!

2. வாழைப்பழம், தேன் மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றும், உங்கள் உச்சந்தலையில் இழந்த ஈரப்பதத்தினை மீட்டெடுக்கும். மேலும், வறட்சி மற்றும் கூச்சத்தை எதிர்த்துப் போராட உதவி புரிகிறது. வெந்தயத்தை இரவு முழுவதுமாக ஊற வைத்து, காலையில் கலந்து, இதில் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் அளவு செம்பருத்திப்பூ தூள் சேர்க்க வேண்டும். அனைத்துப் பொருட்களையும் கலந்த பிறகு, இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும். வெந்தயம் உங்கள் முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதோடு, முடி உதிர்வையும் குறைக்கிறது.  

3. முதலில், வெந்தய விதைகளை அரைத்துப் பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தயிர், ஆமணக்கு எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்கள் அனைத்துமே முடி வளர்ச்சிக்கான நன்மைகளை முழுமையாக வழங்குகிறது. மேலும், இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தினால், உங்களின் நீண்ட கூந்தல் பற்றிய கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.

click me!