மழையில் குளித்தால் உடலுக்கும் கேசத்துக்கு பலன் கிடைக்குமா? ஆய்வு சொல்வது என்ன..??

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 10:09 PM IST

மழையில் நனைவதால் உடல் உபாதைகள் தோன்றும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஜலதோஷம் பிடிக்கும், தலைவலி வரும், தும்மல் வரும் என்கிற உடல்நலப் பிரச்னை உருவாவதற்கு மழை காரணமாகவுள்ளதாக பலரும் கூறுகின்றனர். 


மழையில் நனைவதால் உடல் உபாதைகள் தோன்றும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஜலதோஷம் பிடிக்கும், தலைவலி வரும், தும்மல் வரும் என்கிற உடல்நலப் பிரச்னை உருவாவதற்கு மழை காரணமாகவுள்ளதாக பலரும் கூறுகின்றனர். இதை மருத்துவத் துறை வல்லுநர்களும் ஏற்றுக்கொள்ளக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் மழையில் நனைவதும் மழை நீரும் மனித உடலுக்கு நன்மை ஏற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.

கோடைக் காலத்துக்கு பிறகு பெய்யும் மழை நிலத்தையும் நமது மனதையும் குளிர்விக்கிறது. வெப்பத்தில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. மேலும் மனதுக்கு ஆறுதலாகவும் அமைகிறது. எனினும் அதிகளவு காற்று மாசு கொண்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை அவ்வளவு உகந்தது கிடையாது. பொதுவாக காற்று மாசு கொண்ட பகுதிகளில் அதிக அழுக்கு படிந்திருக்கும். அப்போது மழை பெய்தால், அந்த அழுக்குகளையும் சேர்த்து மழை நீர் பூமிக்கு கொண்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது பெய்யும் மழையில் நனைந்தால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்களுக்கு மேலும் பிரச்னை அதிகரிக்கும். குறிப்பாக மழையில் நனைவது தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் பொடுகினை போக்க உதவுவதாக பலரும் நம்புகின்றனர். ஆனால் அந்த நோக்கத்துடன் நீங்கள் மழையில் நனைந்தால், உங்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

உணவு சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவுமா?

குறிப்பாக இந்த மழைநீர் தலையில் விழுந்து முகப்பரு, சரும வெடிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருசிலருக்கு மழையில் நனைந்துவிட்டு வந்தால், தோலில் அரிப்பு ஏற்படும். இதுவும் ரசாயன மழைநீர் சருமத்தில் விழுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பு தான். மேலும் அதிக உணர்திறன் கொண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு மழைநீர் சருமத்தை கடினமாக்கிவிடக்கூடும்.

திடீரென்று நாய் கடித்தால் என்ன செய்யலாம்..?? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

பருவமழைக் காலங்கள் மற்றும் கோடை மழைக்காலங்களில் பெண்கள் பின்பற்ற வழிமுறைகள் சில உணடு. தயவுசெய்து குளித்து முடித்ததும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இது கூந்தலை மிருதுவாக வைத்திருக்க உதவும். ஆதேபோல கூந்தல் நன்றாக உலர்ந்த பிறகு, முடியை பிண்ணுங்கள். இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் உங்களை அண்டாது.

click me!