குளிர்கால வறட்சி சருமத்துக்கு ஏற்ற ஆர்கானிக் சோப் எளிமையா வீட்டில் செய்வது எப்படினு தெரிஞ்சுக்கோங்க!

By Pani MonishaFirst Published Jan 4, 2023, 4:17 PM IST
Highlights

அதிக ரசாயனங்கள் கலக்காத பொருள்களை கொண்டு தயார் செய்யும் கிளிசரின் சோப் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. 

பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. 

தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். வெறுமனே 50 ரூபாய் ஏதோ ஒரு வாசனை சோப்பை பயன்படுத்தினால் போதும் என்று நினைப்பவர்கள் தான் நடுத்தர குடும்பங்களில் இருக்கின்றனர். சோப்புக்காக சில நூறுகளை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. 

நாம் அன்றாடம் கடையில் வாங்கி பயன்படுத்தும் குறைந்த விலை சோப்பில் வாசனையாகவும், வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன. சோடியம்- பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிகமாக உள்ள சோப்புக்கட்டிகளை பயன்படுத்தும்போது தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது.  

திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.  

இதையும் படிங்க; சிறுநீரகத்துல பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவறாம எடுத்துக்கோங்க!

கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும். 

Step 1: கிளிசரின் பேஸை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். 

step 2: வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா பூவின் இதழ்கள், நலங்கு மாவு ஆகியவற்றை தூவலாம். இதை கிளிசரின் உறையும் முன்பாக செய்ய வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார். 

இதையும் படிங்க; Period cramps: இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் வலி கூட பறந்து போகும்!

click me!