Dry Lips: பனிக்காலத்தில் உதடுகள் வறட்சியா? இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்!

By Dinesh TG  |  First Published Jan 3, 2023, 5:37 PM IST

உதடுகளில் வறட்சி என்பது பனிக் காலங்களில் அதிகமாக ஏற்படுகிறது. மற்ற அனைத்து காலங்களை காட்டிலும், பனிக் காலத்தில் உதடுகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். உதடுகளில் வறட்சி ஏற்பட்டால், எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கொண்டு அதனை எப்படித் தீர்ப்பது என இப்போது தெரிந்து கொள்வோம்.  


பொதுவாக சிலருக்கு உதடுகள் வறட்சி அடைந்தும், கருமை நிறமாகவும், கலை இழந்தும் காணப்படும். இதன் காரணமாக அவர்களது முகத்தின் தோற்றமே பொலிவிழந்து காணப்படும். ஆகையால், மற்றவர்கள் முன் சகஜமாக பேசக் கூட தயக்கம் காட்டுவார்கள். நேராக நிமிர்ந்து செல்வதையும் தவிர்த்து, எப்போதும் தலை குனிந்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில், அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறது. உதட்டில் இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு இயற்கை முறையிலேயே தீர்வு காணலாம்.

உதடுகளில் வறட்சி

Tap to resize

Latest Videos

undefined

உதடுகளில் வறட்சி என்பது பனிக் காலங்களில் அதிகமாக ஏற்படுகிறது. மற்ற அனைத்து காலங்களை காட்டிலும், பனிக் காலத்தில் உதடுகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். உதடுகளில் வறட்சி ஏற்பட்டால், எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கொண்டு அதனை எப்படித் தீர்ப்பது என இப்போது தெரிந்து கொள்வோம்.  

பால் கிரீம்

பால் கிரீம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம் அல்லவா. இது உதடுகளை ஈரப்பதமாக்கி மென்மையாக மாற்றுகிறது. பால் க்ரீமில் மஞ்சள் தூளைக் கலந்து, உதடுகளின் மீது தடவி, இரவு நேரத்தில் இந்த செய்முறையை முயற்சித்து வந்தால் உதடுகளில் வெடிப்பு நீங்கும்.

கற்றாழை

உதடு வெடிப்புகளை குணப்படுத்த கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து, உதடுகளில் தடவி வந்தால், இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாக மற்றும் மிருதுவாகவும் மாறி விடும்.

தேன்

உதடுகளுக்கு தேன் பயனுள்ள நன்மையை அளிக்கிறது. தேனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை குணப்படுத்துகிறது. இரவில் தூங்குவதற்கு முன்பு உதடுகளில் தேன் தடவி, காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். உங்கள் உதடுகளில் உள்ள வெடிப்புகள் மற்றும் வறட்சியை ஒரே இரவில் குணப்படுத்தும் வல்லமை பெற்றது தேன்.

கரிப்பினி பெண்களுக்கு நலம் தரும் "ராஜ்மா" ரெசிபி!

நெய்

நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இது சரும செல்களுக்கு ஈரப்பதத்தினை அளிக்க வல்லது. உதடுகளில் நெய் தடவி வந்தால், சருமம் ஈரப்பதமாகி, உதடுகள் வெடிப்பது நின்று விடும். அதோடு, உதடுகளில் வறட்சியும் நீங்கி விடும். உதடுகளில் நெய்யை உதடு தைலம் போன்று பயன்படுத்தி வரலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை விரலில் எடுத்து உதடுகளில் தடவி வந்தால், உதடுகளின் வறட்சி நீங்கி விடும். உதடுகள் வெடிப்பதும் நின்று விடும். மேலும் உதடுகள் மென்மையாக மாறும்.

தண்ணீர்

குளிர்காலத்தில் நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, சருமம் வறண்டு, உதடுகள் வெடிப்பது இயல்பு தான். இந்நேரத்தில் போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும். இதன் காரணமாக உதடுகளில் வறட்சி பிரச்சனை நீங்கி விடும். 

click me!