இளமையான தோற்றம், பொலிவான முகம் தான் பெரும்பாலான பெண்களின் ஏக்கத்திற்கு காரணமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை இந்த புத்தாண்டில் தொடங்குவதற்கு தீர்மானம் எடுங்கள். சமீப காலங்களில் இளம்பெண்களிடையே கொரியன் சீரிஸ் பிரபலமாகி வருகிறது. கொரிய பெண்களின் முகத்தில் சின்ன பிசிறு கூட இல்லாமல் பளபளவென மின்னுவதை போலவே, தாங்களும் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நம் பாரம்பரிய முறைகளை பின்பற்றி ஒரே வாரத்தில் கொரிய பெண்களைப் போலவே பளபளப்பான சருமத்தை பெற சில வழிமுறைகளை இங்கு காணலாம்.
காலையில் இப்படி தொடங்கணும்!
1) காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தேநீரோ, காபியோ தயாரிக்கும் பழக்கம் எல்லோர் வீட்டிலும் இருக்கும். அதற்கு முன்பாக கொஞ்சம் காய்ச்சாத பாலை எடுத்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். இரண்டு நிமிஷம் காத்திருந்து முகத்திற்கு மசாஜ் செய்து விடுங்கள். பின்னர் சுத்தமான பருத்தி துணி அல்லது பஞ்சால் முகத்தை துடைத்து பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.
undefined
2) பால் கொண்டு முகத்தை பளபளக்க செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து புத்துணர்ச்சியை உணருங்கள். செயற்கை ரசாயனங்களை முகத்தில் பூசுவதை விட இது நல்ல பலனளிக்கும்.
3) சருமம் வறண்டு போகாமல் இருந்தாலே பொலிவான முகத்தோற்ற ம் கிடைக்கும். அதற்கு முகம் ஈரப்பதமாக காணப்படுவது அவசியம். இதை எளிமையாக பெற கற்றாழை ஜெல்லுடன், பாதாம் எண்ணெய் (2ஸ்பூன்) கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசலாம். ஈரப்பதமான சருமம் கிடைக்கும். இந்த மூன்று விஷயங்களையும் முதல் நாளில் செய்ய வேண்டும்.
சருமத்திற்கு உதவும் ஊட்டச்சத்து!
முகத்தின் வெளிப்புறத் தோற்றத்திற்கு பேஸ் பேக் போட்டால் மட்டும் போதாது. நம் உடலுக்குள்ளும் சில ஊட்டச்சத்துகள் இருப்பது அவசியம். அதற்கு அன்னாசி, ஸ்ட்ராபெரி, கிவி, பப்பாளி போன்ற வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். பருவகால பழங்களை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய்யில் பொரித்த உணவுகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள். ஆளி விதைகள், பூசணி விதைகள் வெந்தயம், சியா விதைகள் மென்று உண்பது நல்லது. உணவுகளுடன் போதிய தண்ணீரும் உடலுக்கும் சருமத்திற்கும் நல்லது. இதை இரண்டாம் நாள் செய்ய வேண்டும். கொரியன் பெண்கள் தங்களுடைய சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவர்களின் அழகிற்கு முக்கிய காரணம்.
அப்பழுக்கில்லா சருமம்!
சருமத்தை பராமரிக்க அதனை அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். அப்பழுக்கில்லாத சருமம் வேண்டுமென்றால் நாம் தான் அதனை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு அடிக்கடி ஸ்க்ரப் செய்வது முக்கியம். ஒரு வாழைப்பழத்துடன் தேன், சர்க்கரை ஆகியவை கலந்து முகத்தில் பூசிவிட்டு மசாஜ் செய்யுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி கொள்ளுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதை முகம் மட்டும் இல்லாது அக்குள், இறுக்கமான உடைகளால் உண்டான கருமை நிற பகுதி ஆகியவற்றில் கூட போடலாம். நல்ல பலன் கிடைக்கும். இதை மூன்றாம் நாளில் செய்யலாம்.
இதையும் படிங்க; Happy new year wishes 2023: பிரியமானவர்களுக்கு பிரியங்கள்... இதோ உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்து குறிப்புகள்!
கண்கள் மீது கவனம்!
முகத்தில் அழகு ஒளிரும் கண்களில் தான் உள்ளது என கவிஞர்கள் பாடியுள்ளனர். நல்ல பார்வைக்கு கண்களை பராமரிப்பது அவசியம். வைட்டமின் ஏ சத்துள்ள கேரட் உண்ணுங்கள். வெள்ளரிக்காவை சாறு எடுத்து கண்களை சுற்றி பூசி மசாஜ் செய்யுங்கள். கண் நலம் மேம்படும். இதை நான்காம் நாளில் செய்யலாம்.
பொலிவான சருமத்திற்கு பேஸ் பேக்!
பேஸ் பேக் வாரத்தில் ஓரிரு முறை போட்டாலே போது நல்ல பலன் உண்டு. முல்தானிமட்டி, ஆரஞ்சு ஜூஸ்,மில்க் பவுடர் ஆகியவற்றை கலந்து நல்ல பதத்தில் பேஸ் பேக்காக போடலாம். இதை ஐந்தாம் நாளில் பின்பற்றுங்கள்.
மனதிற்கு புத்துணர்வு
கற்றாழை ஜெல், பாதம் எண்ணெய், இரண்டு சொட்டு லாவண்டர் ஆயில் போன்றவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசுங்கள். இது முகத்திற்கு மட்டும் இல்லாமல் மனதிற்கு புத்துணர்வு அளிக்கும் இந்த முறையை ஆறாம் நாள் பின்பற்ற வேண்டும்.
நல்ல தூக்கம்!
ஆரோக்கியமான சருமம், உடல், மனம் எல்லாவற்றிற்கும் மையமாக நல்ல தூக்கம் உள்ளது. வெறும் பேஸ் பேக், உணவு முறை மட்டுமின்றி 7 மணி நேர தூக்கமும் தான் முகப் பொலிவை கொடுக்கும். ஏழாவது நாள் மட்டுமின்றி நாள்தோறும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்ட ஏழு முறைகளையும் வாரம் முழுக்க பின்பற்றினால் பொலிவான சருமத்தினை பெறலாம். ஒரே வாரத்தில் நல்ல முடிவுகள் கிடைத்தாலும் அதனை தொடர்ந்து பின்பற்றினால் தான் நீண்டகால பலனை அனுபவிக்கமுடியும்.
இதையும் படிங்க; New year 2023 Gift Ideas: செலவு கம்மியா புடிச்சவங்களுக்கு இந்த கிப்ட் கொடுங்க அசந்து போயிடுவாங்க!