சருமத்தில் மூக்கின் மேலே உருவாகும் வெள்ளைப் புள்ளிகள், ஒருவருடைய முக அழகை கெடுத்து விடும். சிலர் இதனைப் போக்க என்னென்னமோ செய்கிறார்கள். இதனை அப்படியே விட்டு விடமால், ஒரு சில இயற்கைப் பொருட்களை கொண்டே மிக எளிதாக சரி செய்யலாம். இப்போது வெள்ளைப் புள்ளிகளை போக்கும் அந்த எளிய முறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
நம்மில் பலருக்கும் மூக்கின் மேற்புறம் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில், வெள்ளை நிறத்திலான புள்ளிகள் காணப்படும். இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதையே வெள்ளைப் புள்ளிகள் என்று கூறுவர். சருமத்தில் இறந்த செல்கள் மற்றும் எண்ணெய்ப் பசை போன்றவை அதிகரித்து, சருமத் துளைகளில் அடைப்புகள் உண்டாகும் சமயத்தில், அவை வெள்ளைப் புள்ளிகளை உருவாக்குகிறது.
வெள்ளைப் புள்ளிகள்
undefined
சருமத்தில் மூக்கின் மேலே உருவாகும் வெள்ளைப் புள்ளிகள், ஒருவருடைய முக அழகை கெடுத்து விடும். சிலர் இதனைப் போக்க என்னென்னமோ செய்கிறார்கள். இதனை அப்படியே விட்டு விடமால், ஒரு சில இயற்கைப் பொருட்களை கொண்டே மிக எளிதாக சரி செய்யலாம். இப்போது வெள்ளைப் புள்ளிகளை போக்கும் அந்த எளிய முறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
வெள்ளைப் புள்ளிகளை போக்கும் வழிகள்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொண்டு, நன்றாக கலந்து விட வேண்டும். இதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை கலந்து, வெள்ளைப் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி விட்டு, கிட்டத்தட்ட 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ச்சியான நீரால் மிகவும் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி விட வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்வதால் வெள்ளைப் புள்ளிகளை போக்க முடியும்.
ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொண்டு, அதுடன் 2 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து, முகம் முழுவதும் தடவி விட வேண்டும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வந்தால் போதும். வெள்ளைப் புள்ளிகள் அடியோடு மறைந்து விடும்.
Turmeric Milk: மஞ்சள் பாலில் இந்த மூன்று பொருட்களை சேர்த்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்!
ஒரு கிண்ணத்தில், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூளில் 1 தேக்கரண்டி தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால், மென்மையாக தேய்த்துக் கழுவனால், வெள்ளைப் புள்ளிகள் நீங்கி விடும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து, அதுடன் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், வெள்ளைப் புள்ளிகள் நீங்குவதோடு, முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் உள்ள வெள்ளைப் புள்ளிகள் நொடிப் பொழுதில் நீங்க, ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 2 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு, குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.