கருவுற்றிருக்கும் பெண்களுக்கு முகத்திலுள்ள தோல்களில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இப்பிரச்சினைகள் சில ஹார்மோன் மாற்த்தினால் ஏற்படலாம்.
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு முகத்திலுள்ள தோல்களில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இப்பிரச்சினைகள் சில ஹார்மோன் மாற்த்தினால் ஏற்படலாம். கர்ப்பக் காலங்களில் தொடர்ந்து கீரை வகைகள், முழு தானியங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் உள்ளிட்ட 3 வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இந்த உணவு வகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
பச்சைக் காய்கறிகள்
undefined
இயற்கையாக கிடைக்கின்ற பச்சைத் தாவரங்களில் கால்சியம் அதிகளவில் இருக்கும். இது, தோல் சுருக்கத்தை கட்டுபடுத்துவதோடு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையேம் தடுக்க உதவுகிறது. பச்சைக் காய்கறிகளை சிறிதளவு வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவதால், இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குள் சென்று விடும். இப்படியாக காய்கறிகளை சாப்பிடுவதால் தோல்கள் செழிப்பு பெறும். எடுத்துக்காட்டாக வெள்ளரிக்காய், அவரை இனத் தாவரங்கள், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றை சாப்பிடலாம்.
முழு தானியங்கள்
கர்ப்ப காலத்தில் முழுதானியங்கள் எடுத்துக் கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஏனென்றால், பாலிஷ் செய்யப்படாத தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்திருக்கும். இது போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதால் தோல் வலிமை பெறும். எடுத்துக்காட்டாக கோதுமை, அரிசி மற்றும் புழுங்கலரிசி ஆகியவற்றை சாப்பிடலாம்.
Eating Rice: வெறும் அரிசியை சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?
தானியங்களால் பெறப்படும் மாவினால் உணவு தயாரித்து சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளித்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும்.
கீரை வகைகள்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தினால் தலைமுடி உதிர்வு, தோல் சுருக்கம் மற்றும் அதிகப்படியான களைப்புகள் ஏற்படும். இதனை கட்டுபடுத்த கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் தேவை. இந்த சத்துக்கள் கீரை வகைகளில் அதிகமாக கிடைக்கிறது.
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் அழியும் வரை சமைப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தினமும் ஒரு வகை கீரையை எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது. எடுத்துக்காட்டாக பொன்னங்கன்னி கீரை, வல்லாரை கீரை மற்றும் சலாது ஆகியவற்றைக் சாப்பிடலாம்.