Beauty Tips: அழகான முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள்; கவலையை விடுங்க; சிம்பிள் பியூட்டி டிப்ஸ் இதோ!!

By Asianet TamilFirst Published Jul 25, 2024, 11:42 AM IST
Highlights

முகத்தில் கரும்புள்ளிகள், கருமையான திட்டுக்கள் மறைய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று அழகு நிபுணர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளனர்.
 

கொத்தமல்லி :
வீட்டில் இருக்கும் கொத்தமல்லி மஞ்சள் முகப்பொலிவிற்கு ஏற்றது. கொத்தமல்லி இலையுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பால்  சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் பூசவும். அந்த பேஸ்ட் நன்கு  காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவினால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.

எலுமிச்சை:
எலுமிச்சை சாறுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி 20 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ  வேண்டும். வாரம் இரண்டு முறை முயற்சிக்கலாம். எலுமிச்சம்பழம் சாறில் தயிர் சமமாகக் கலந்து முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை  கழுவவும். 

வெள்ளரிக்காய்:
ஒரு வெள்ளரிக்காயை அரைத்து கற்றாழை ஜெல் கலக்கவும். கரும்புள்ளி உள்ள பகுதிகளில் இந்த பேஸ்ட்டை தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து லேசான குளிர்ந்த நீரில் கழுவலாம். 

60 வயதிலும் ஜொலிக்கும் நீதா அம்பானி.. அவங்கஅழகின் ரகசியம் இந்த மேஜிக் ஜூஸ் தானாம்..

வேப்ப இலை:
வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து ரோஸ் வாட்டர் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில், கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் காயவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உருளைக்கிழங்கு சாறு எடுத்து பஞ்சு சாறில் நனைத்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளீச் என மாறும்.

வாழைப்பழ தோல், ஆரஞ்ச் தோல்:
வாழைப்பழ உட்புற தோலிலை முகத்தில் தேய்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி மறையும். 

Latest Videos

Beauty tips for Face: பட்டுப்போல முகத்தில் முத்துப்போல பருக்கள்.. பட்டுன்னு போக நச்சுன்னு 4 டிப்ஸ்!!

முட்டை, கடலை மாவு:
முட்டையின் வெள்ளைக்கரு, கடலை மாவு சேர்த்து முகத்தில் நன்றாக பூசி உலர வைத்து கழுவி வேண்டும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும். அழுக்குகளை அகற்றும். பருக்களால் ஏற்பட்ட கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். உடலில் வைட்டமின் சத்து குறைபாட்டினாலும் முகத்தில் கரு திட்டுக்கள் வரலாம். 

click me!