Beauty Tips for Face: முகத்தில் எண்ணெய் பசையா? சிம்பிள் ஃபேஸ் பேக் போடுங்க சருமம் ஜொலிக்கும்!!

By Asianet Tamil  |  First Published Jul 15, 2024, 10:33 AM IST

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சென்ஸ்ட்டிவ் ஸ்கின் என்பதால், ஏராளமான பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து என்னமாதிரியாக ஃபேஸ் பேக்குகளை போடலாம் என்று பார்க்கலாம்.


புதினா ஃபேஸ்மாஸ்க்:
வீட்டில் எப்போதும் புதினா இருக்கும். ஒரு கைப்பிடி புதினா இலையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். சாறை தனியாக பிரித்து தேன் கலந்து வைக்கவும். முகத்தை சுத்தம் செய்து இந்தக் கலவையை முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் வரை நன்கு உலர விட்டு  வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். 

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்:
1  டீஸ்பூன் கடலை மாவு, தயிர் 1 டீஸ்பூன் கலந்து முகத்தை சுத்தம் செய்த பின்னர் இந்த பேஸ்டை தடவ வேண்டும். 20 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவ வேண்டும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவவும். 

தினமும் தலைக்கு குளிச்சா முடி அதிகம் கொட்டுமா..? உண்மை என்ன..?

முல்தானி மட்டி ரோஸ் வாட்டர்:
ஒரு கிண்ணத்தில் முல்தானி மட்டி 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 டீஸ்பூன், லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன் கலந்து இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். 

Tap to resize

Latest Videos

ஓட்ஸ் ரோஸ் வாட்டர்:
2 டீ ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை சிறிதளவு தேன், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து ஊறவைத்து முகத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவவும். முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். 

வேப்பிலையும் மஞ்சளும்:
பத்து வேப்பிலைகள் மஞ்சள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் நீங்கும். பருக்கள் மறையும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மை நீங்கும். 

click me!