ஜிஎஸ்டி வந்தது எப்படி…? கடந்து வந்த பாதை…!!!

First Published Jun 30, 2017, 1:47 PM IST
Highlights
How the GST came from - The path that passed


ஜிஎஸ்டி மசோதா தொடங்கியது முதல் எத்தடை தடைகள், தடங்கல்களை சந்தித்துள்ளது என்பது குறித்து யாரும் அறியாத சில சம்பவங்களும் உள்ளன. இதில், காங்கிரஸ் ஆட்சி காலம் தொடங்கி, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட எதிர்ப்புகளும், தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதும் வரிசை படுத்தப்பட்டுள்ளன.

2006-07 பட்ஜெட்: 2006-07 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சமர்ப்பித்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய, மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஏற்படுத்தப்பட்டது.

2008: அசிம்தாஸ் குப்தா தலைமையிலான குழு ஜிஎஸ்டி தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதன்மீது நடைபெற்ற விவாதத்தில் பல மாநிலங்கள் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தன.

2009: அதிகாரமளிக்கப்பட்ட குழு, ஜிஎஸ்டி மீதான முதல் விவாத அறிக்கையை 2009 நவம்பரில் வெளியிட்டது. இதில் கூட்டாட்சி முறைப்படி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, இரு மாநிலங்களிடையேயான ஜிஎஸ்டி என மூன்று வித வரி வசூல் முறையை வெளியிட்டது. இதில் மாநிலங்களிடையேயான வரியை மத்திய அரசு வசூலித்து மாநிலங்களுக்கு பகிர்த்து அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

2011: 2011 மார்ச் மாதம் 115வது அரசியல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையை 2013 ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. பின்னர் 2014ல் அப்போதைய மத்திய அரசு பதவிக்காலம் முடிந்ததால், மசோதா செல்லாததானது.

2014: அடுத்து வந்த பாஜ தலைமையிலான மத்திய அரசு, ஜிஎஸ்டியில் சில திருத்தங்களை மேற்கொண்டு, 112வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை 2014 டிசம்பர் 19ம் தேதி அறிமுகப்படுத்தியது.

2015: கடந்த ஆண்டு மே 6ம் தேதி, இந்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2015 மே 12ம் தேதி இந்த மசோதா, 21 உறுப்பினர்கள் அடங்கிய பூபேந்தர் யாதவ் தலைமையிலான மாநிலங்களவை தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. 

2015ஜூலை 22 அன்று தேர்வுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

2015 ஆகஸ்ட்: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

2016 மார்ச்: வரி தொடர்பான காங்கிரசின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

2016 ஆகஸ்ட்: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

2016 செப்டம்பர்: ஜிஎஸ்டியை அமல்படுத்த 50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில்,  16 மாநிலங்கள் மாநில ஜிஎஸ்டியை நிறைவேற்றின. இதை தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களும் மாநில ஜிஎஸ்டியை நிறைவேற்றியுள்ளன.

2016 நவம்பர்: நான்கு வகையான வரி விதிப்பு கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.

2017 மார்ச்: ஜிஎஸ்டி தொடர்பான 4 முக்கிய சட்டப்பிரிவுகள் நிறைவேற்றப்பட்டன.

2017 ஜூன் 18: நகரில் நடந்த கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு வரியை இறுதி செய்தது ஜிஎஸ்டி கவுன்சில்.அடுத்த நாள் சேவை இனங்களுக்கு வரி விதிக்கப்பட்டது. 11ம் தேதி மறு பரிசீலனை செய்யப்பட்டு 66 பொருட்களுக்குவரி குறைக்கப்பட்டது

2017 ஜூன் 30: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நள்ளிரவு ஜிஎஸ்டி அறிமுக விழா நடக்கிறது. 
ஜிஎஸ்டியில் 5 மத்திய வரிகள், 6 மாநில வரிகள் என 11 வரிகள் ஒன்றிணைகின்றன.

click me!