உலகம் முழுவதும் பெண்ணின் பொதுவான திருமண வயது 21 ஆகவும் ஆணுக்கு 24 ஆகவும் உள்ளது. இது நாடுக்குநாடு வேறுபடுகிறது. மேற்கு ஆசிய நாடான ஈராக் நாட்டில் பெண்ணின் திருமண வயது, 18ஆக உள்ளது. இதனை தற்போது பெண்ணுக்கு 9 ஆகவும், ஆணுக்கு, 15 ஆகவும் குறைத்து, ஈராக் நாட்டு நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை அமைச்சகம் மசோதா ஒன்றே தாக்கல் செய்துள்ளது.
குடும்ப விவகாரங்களில் தலையிடும் மதபோதகர்கள்!
இந்த புதிய மசோதா மூலம், ஒருவரது தனிப்பட்ட குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்க, மத போதகர்கள் மற்றும் நீதித்துறையை தேர்வு செய்ய குடிமக்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் வழிவகை செய்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறினால் 9 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்க முடியும்.
ஏற்கனவே திரும்பப்பெறப்பட்ட மசோதா!
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் இந்த மசோதாவை ஈராக் நாட்டு நீதித் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த மசோதா திரும்பப்பெறப்பட்டது.
இந்நிலையில், ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லீம் MPக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பெண்ணின் திருமண வயதை குறைக்கும் மசோதாவை, ஈராக் நாட்டு நீதித் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்துள்ளது.
வங்கதேசத்தில் தொடரும் அடக்குமுறை? இந்தியாவிற்குள் நுழைய நூற்றுக்கணக்கில் காத்திருக்கும் சிறுபான்மைியனர்
இந்த திருமண வயது குறைப்பு மசோதாவுக்கு, மனித உரிமை அமைப்புகள், பெண்கள் நலன்சார்ந்த குழுக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதா தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த சாரா சன்பார், ஈராக் நாடு கொண்டுவரும் இந்த மசோதாவால் இளம்பெண்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். இதுபோன்ற மசோதாக்களின் மூலம் நாடு பின்னோக்கி நகர்வதையே இது காட்டுகிறது. தனிநபரின் குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை 3வது நபருக்கு அளிப்பது என்பதே வாரிசு உரிமை, விவாகரத்து மற்றும் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளா். இதுபோன்ற நடவடிக்கைகளால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதோடு, பெண்கள் மீதான சுரண்டல்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.