சூரிய குடும்பத்தில் உயிர்கள் வாழ அனைத்து அம்சங்களும் நிறைந்தது இந்த பூமி மட்டும் தான். பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டும், சூரியனை சுற்றியும் வருகிறது. பூமி சுரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. அதேநேரத்தில் பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 1 நாள் (24 மணிநேரம்) ஆகிறது.
பூமியை விட்டு விலகிப்போகும் சந்திரன்!
நம் பூமியின் இயற்கை துணைக்கோளான சந்திரன், பூமியை சுற்றி வருகிறது. ஆனால், அது மெல்ல மெல்ல பூமியைவிட்டு விலகிச்செல்வதாக விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும் இது சமீபத்திய கண்டுபிடிப்பு அல்ல, விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அதன் வரலாறு மற்றும் புவியியல் சூழலை விரிவாக ஆராய்கிறது.