அரசியல் நிலையில்லா தன்மை, பொருளாதார நெருக்கடி, மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உலகில் பல அரசுகளை வீழ்த்தியுள்ளது.
வங்கதேசம்
வங்கதேசத்தில் அரசு பணிக்கான இட ஒதுக்கீட்டை கண்டித்து மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம், கிளர்ச்சியாக மாறி இறுதியில் வன்முறையாக உருமாறியது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். அரசியல் ஸ்திரதன்மை இல்லாதாதல் பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து, அங்கே ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை
அண்டை நாடான இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. ராஜபக்சே குடும்பம் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு நாட்டையும் விட்டே ஓடினார். அதைத் தொடர்ந்து அரசு கவிழ்ந்ததால் ராணுவம் ஆட்சியை பிடித்தது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2022ம் ஆண்டில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் ராணுவம் நேரடியாக தலையிடவில்லை என்றாலும், அந்நாட்டின் ராணுவ தளபதியே இதற்கு முழு காரணம் என சொல்லப்பட்டது.
ஆப்கானிஸ்தான்
2020ஆம் ஆண்டில் கொரோனா முடிவுக்கு வந்த மறுகனமே, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசை கைப்பற்றின. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது. சில வாரங்களில் அங்கே போக்குகள் மாறின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைவிடப்பட்டு தாலிபான்கள் ஆட்சி அமைந்தன.
துனிசியா
2021ஆம் ஆண்டில் வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்டார். அடுத்து 2022ம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ நாட்டில், அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரின் ஆட்சியை ராணுவம் தலையிட்டு கவிழ்த்தது. தொடர்ந்து, துனிசியாவில் ராணுவ ஆட்சி அமைந்தது. அப்போது, கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. நாட்டின் போதிய பாதுகாப்பை முன்னாள் அதிபர் ரோச் மார்க் உறுதி செய்யவில்லை என்று கூறி ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
சூடான்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. சூடானில் பொருளாதார சிக்கலே மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டது. இதையே காரணமாக வைத்து ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம், தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
அல்ஜீரியா
அதே ஆண்டில், அல்ஜீரியாவிலும் அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. அதைதொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
கடந்த 2023ம் ஆண்டில் நைஜர், காபோன் நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த லிஸ்டில் தற்போது வங்கதேசமும்
இணைந்துள்ளது.