Explained | வங்கதேச கலவரம்! - தொடரும் மாணவர்கள் போராட்டம் - முழு பின்னணி!

First Published | Aug 5, 2024, 4:37 PM IST

வங்கதேசத்தில் அரசு வேலைக்கான் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.
 

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசு வேலைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மாணவர்கள், கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேச சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நடைமுறை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த ஜூலை 21ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் பிற நகரங்களில் நிகழ்ந்த வன்முறையில் மாணவர்கள் 114 பேர் உயிரிழந்தனர். சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை வங்கதேச உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, வங்கதேச அரசு வேலைகளில் 93% சதவீத காலி பணியிடங்களை தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் வெடித்த வன்முறை இயல்பு நிலைக்கு திரும்பியது.

Tap to resize

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை புறம்தள்ளிய ஷேக் ஹசினா, இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். பெரும் கிளர்ச்சியாக மாறிய போராட்டம் அரசுக்கு எதிரான பேராட்ட உருமாறியது. தலைநகர் டாக்காடவில் வெடித்த இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். இதனால் வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Bangladesh Protest End: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டு முறை ரத்து! மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் வங்க தேசம்!
 

இடைவிடாத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்கதேச பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மேலும் 100 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு பலியாகினர். நாடு முழுவதும் பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில், ராணுவம் வங்கதேசத்தை கைப்பற்றிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டே தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வங்கதேசம்? -தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்; பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓட்டமா?
 

Latest Videos

click me!