Mid East Crisis | ஈரான் இன்று இஸ்ரேலை தாக்கக்கூடும்! முன்கூடியே தாக்க தயாராகும் நெத்தயன்யாகு!

First Published Aug 5, 2024, 10:27 AM IST

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு, இஸ்ரேலிய மண்ணில் தாக்குதலைத் தடுக்க, ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் தாக்குதல் திங்கட்கிழமை முதல் தொடங்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் G7 நாடுகளைச் சேர்ந்த தனது குழுவிற்கு எச்சரித்துள்ளார். இருப்பினும், இஸ்ரேலின் முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு இஸ்ரேலிய மண்ணில் தாக்குதலைத் தடுக்க ஈரான் மீது ஒரு முன்கூட்டிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் முன்னணி உளவுத்துறை நிறுவனங்களான மொசாட் மற்றும் ஷின் பெட் அந்தந்த தலைவர்கள் டேவிட் பர்னியா மற்றும் ரோனென் பார் ஆகியோர் நெதன்யாகுவால் அழைக்கப்பட்ட ஒரு கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர், இதில் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஐடிஎஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

1980களில் ஈரானிய ஆதரவுடன் நிறுவப்பட்ட ஹெஸ்பொல்லா அமைப்பு தனது தாக்குதல்களை இஸ்ரேலிய எல்லைக்குள் விரிவுபடுத்தும் என்று ஈரான் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த இராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் சமீபத்தில் படுகொலை செய்ததைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 30ம் தேதியன்று தெற்கு பெய்ரூட்டில் மக்கள் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியை இஸ்ரேல் தாக்கியது, இதில் ஷுக்ர் மற்றும் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மூன்றாம் உலகப்போரின் தேதியை கணித்த இந்திய ஜோதிடர்.. வரவிருக்கும் அழிவு குறித்து எச்சரிக்கை..

அதைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் மூலம் நிலைமை மேலும் சிக்கலானது.

Latest Videos


நிலைமை கைமீறிபோயுள்ள நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றத்தை தணிக்க ஜோர்டான் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அயுமான் சபாடி நேற்று ஈரான் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், இந்த சமரச முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?

GPS முடக்கம்

டெல் அவிவ், மத்திய இஸ்ரேலின் முக்கியப் பகுதிகளில் ஜிபிஎஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. இது போரு தொடக்கத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

click me!