இந்தியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது பொருளாதார கொள்கையில் முன்னேற்றம் தரும் வகையிலான மாற்றங்களை கொண்டு வராவிட்டால் நடுத்தர வருமான பிரிவிலேயே அவை சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக, உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது
உலக வங்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1990ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 34 நாடுகள் மட்டுமே, நடுத்தர வருமான பிரிவிலிருந்து அதிக வருமானம் பெரும் பிரிவுக்கு முன்னேறியுள்ளன என தெரிவித்துள்ளது.
மேலும், பருவ நிலை மாற்றம் வேறு கூடுதல் சவாலை ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு, பணக்கார நாடுகளைக் காட்டிலும் நடுத்தர மற்றும் ஏழை நாடுகளுக்கே அதிக செலவாகும்.
அதனால், நடுத்தர வருமானப் பிரிவில் உள்ள நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியே தீரவேண்டும். அவ்வாறு செய்யவிட்டால், அமெரிக்க தனிநபர் வருமானத்தில் 25% சதவீதத்தை அடைய, சீனாவுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்தோனேஷியாவுக்கு 70 ஆண்டுகளும்; இந்தியாவுக்கு 75 ஆண்டுகளும் தேவைப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.