அதிபர் டிரம்பின் செய்தியாளர் சந்திப்புகளில் ஆவேசமான பேச்சுக்களும், இழிவான கருத்துக்களும் உதிர்க்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாகப் பெண் பத்திரிகையாளர்கள் மீது அவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கிறது.
முன்னதாக, டிரம்பிற்கு வயதானதால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை எழுதிய பெண் பத்திரிகையாளரை "அசிங்கமானவர்" (ugly) என்று திட்டினார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் பத்திரிகையாளரை "பன்றி" (piggy) என்று ஏசினார். மற்றொருவரை "பயங்கரமான நபர்" (a terrible person) என்றும் குறைகூறினார்.
ஊடகங்களில் உள்ள பெண்களுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்து பயன்படுத்தி வரும் இத்தகைய தரக்குறைவான வார்த்தைகள், அவரது பாணியாகவே இருப்பது மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.