வாங் ஃபுக் கோர்ட் என்பது எட்டு பிளாக்குகளில் சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு கட்டிடம். ஹாங்காங்கில் அதிக குடியிருப்பாளர்களைக் கொண்ட கட்டிடங்களில் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் 37 வயது தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரவில் 7 கட்டிடங்களில் தீ பரவியிருந்தது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நான்கு கட்டிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீ விபத்தில் சிக்கி 44 உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் 279 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.