பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் பேட் டச் விவகாரத்தில் சண்டை போட்டு பிரிந்துள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வந்த கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும், தற்போது கடும் மோதலில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களுள் ஒருவராக இருப்பவர் தான் பார்வதி. இவர் இந்த வீட்டில் சண்டைபோடாத ஒரே போட்டியாளராக கம்ருதீன் இருந்து வந்தார். அதற்கு முக்கிய காரணம், கம்ருதீன் மீது பார்வதி கிரஷ் இருந்தது. அதுமட்டுமின்றி தன்னுடைய முன்னாள் காதலியும் பார்க்க உன்னைப்போலவே இருப்பார் என்று கம்ருதீன் சொன்னதால் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
24
பேட் டச் விவகாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது வாரத்தில் கம்ருதீன் தன்னை தவறாக தொட்டதாக பார்வதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது வாட்டர்மிலன் ஸ்டார் திவாகரிடம் இதுபற்றி அவர் பேசி இருந்தார். அந்த பேட் டச் விவகாரம் தான் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. நான் அம்மா சத்தியமா எதுவுமே பண்ணவில்லை என கூறும் கம்ருதீன். இவ ஏற்கனவே வாட்டர்மிலன் பேச்சைக் கேட்டு என்னுடைய பெயரை நாரடித்துவிட்டால், இப்போ மறுபடியும் எனக்கு குல்லா கொடுத்திருவாளோ என பயமாக இருக்கிறது என கார்டன் ஏரியாவில் வைத்து பார்வதி முன்னிலையில் அமித் மற்றும் கானா வினோத்திடம் பேசினார் கம்ருதீன்.
34
கம்ருதீன் - பார்வதி சண்டை
இதையடுத்து சாப்பிடுகையில் பேசும் பார்வதி, நான் அன்றைக்கு நீ பேட் டச் பண்ணியதுபோல் தோன்றியதால் அதை சொன்னேன் என அந்த விவகாரத்தை மீண்டும் எடுத்து பேசத் தொடங்கியது, பாதியிலேயே எழுந்த கம்ருதீன், சேரை எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து செல்கையில், அவரை சமாதானப்படுத்த பேபி என பார்வதி அழைக்க, இனிமே என்னை பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். சிறிது நேரம் கழித்து சோபாவில் அமர்ந்து பார்வதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது மீண்டும் அவரிடம் சென்று கம்ருதீன் பேசுகிறார்.
அப்போது சோபா மீது கால் வைத்து, நான் உன்னை பேட் டச் பண்ணுனேனா என கேட்கிறார். நீ சும்மா இரு என பார்வதி சொல்ல, ஒரு பொண்ணு ஒத்துக்காம தொடுற அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது. நீ ஒரு பொண்ணுங்குறதுனால இஷ்டத்துக்கு பேசக்கூடாது. வார்த்தை விடக் கூடாது. உன்னை நீ நியாயப்படுத்துவதற்காக என்னை தூக்குல கூட தொங்க வைப்ப. நான் அப்படி பண்ணி இருந்தா நீ என்னை செருப்பாலயே அடிச்சிருக்கனும். பேட் டச் பண்றாங்களாம். வேற வேலை வெட்டி இல்ல எங்களுக்கு, இவ பெரிய ஐஸ்வர்யா ராய், இவள பேட் டச் பண்றாங்களாம் என சொல்லிவிட்டு செல்கிறார். இவர்களின் மோதல் இந்த வார ஃப்ரீஷ் டாஸ்கில் பெரிய விவாதப் பொருளாக மாற வாய்ப்பு உள்ளது.