ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. இதன் பிரம்மாண்டமான பைனல்ஸ் நடைபெற்றுள்ள நிலையில், அதில் யார் வெற்றி பெற்றார் என்பதை பார்க்கலாம்.
சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வரும் சேனல் தான் ஜீ தமிழ். இதில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புத்தம் புது நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் பெயர் சிங்கிள் பசங்க. இந்நிகழ்ச்சியை பொறுத்தவரை யூடியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் ஒவ்வொருவராக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஜோடியாக ஒரு சின்னத்திரை ஹீரோயின்களும் சேர்ந்து இந்த ஷோ நடத்தப்பட்டது. இதில் வார வாரம் ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதற்கு நடுவர்கள் மதிப்பிட்டு, இறுதிவரை கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக டி.ராஜேந்தர், ஆலியா மானசா, கனிகா ஆகியோர் இடம்பெற்றனர்.
24
சிங்கிள் பசங்க நிகழ்ச்சி
இந்த நிலையில், சிங்கிள் பசங்கள் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனஸ் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கப்பாண்டி - சாந்தினி ஜோடி, ராவண ராம் - ஆஷா ஜோடி, ஜிம்கிளி நிரஞ்சனா, சரவணன் உபாசனா, பிளாக்கி ஸ்டார் சுரேஷ், ஃபெளசி, தமிழரசன் கீர்த்திகா, விக்னேஷ் - ஷில்பா, ராகவேந்திரா - பிரணிகா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் மிகவும் கொண்டாடப்பட்ட ஜோடி என்றால் அது கூமாபட்டி தங்கப்பாண்டி - சாந்தினி மற்றும் ராவண ராம் - ஆஷா ஜோடி தான். இவர்கள் இருவருமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர்.
34
சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர்
இந்த நிலையில், சிங்கிள் பசங்க நிகழ்ச்சி பிரம்மாண்ட பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அவர் எதிர்பார்த்தபடியே கூமாபட்டி தங்கப்பாண்டி தான் இந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்த படியாக இரண்டாவது இடம் ராவண ராம் - ஆஷா ஜோடிக்கு கிடைத்தது. வெற்றிபெற்ற தங்கப்பாண்டி - சாந்தினி ஜோடிக்கு வின்னருக்கான டிராபி வழங்கப்பட்டது. இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
கூமாபட்டி தங்கப்பாண்டி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பேமஸ் ஆனவர். அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக அவர் சாந்தினி உடன் நெருக்கமாக டான்ஸ் ஆடியதைப் பார்த்து பலரும் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து அடுத்தடுத்த எபிசோடுகளில் வெற்றிபெற்று முன்னேறிய தங்கப்பாண்டி, தற்போது டைட்டில் வின்னர் ஆகி தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கி உள்ளார்.