எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் போலீஸிடம் இருந்து தப்பிக்க கதிரை வைத்து ஒரு டிராமா போட்டிருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தமிழ் சோறு பிசினஸ் தொடங்குவதற்காக ஆயத்தமாகி வர, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஒரு ரெளடி கும்பலை தயார் செய்து அனுப்பி இருக்கிறார் ஆதி குணசேகரன். மறுபுறம் வீட்டிற்கு வரும் கொற்றவை, ஜனனிடம் கடை திறப்பு விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதை பற்றி பேசுகிறார். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கடையை திறந்தால் யாரும் கடைக்கு வர மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு கொற்றவையிடம் அதெல்லாம் வேண்டாம் என ஏற்க மறுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
விசாலாட்சியிடம் கெஞ்சும் தாரா
அதுமட்டுமின்றி போலீஸிடம் இருந்து தப்பிக்க பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள ஆதி குணசேகரன், கதிரிடம், அவரது மகள் தாராவுக்கு போன் போட்டு அப்பா இனிமே வீட்டுக்கு வர மாட்டேன், நீ அம்மாவை பத்திரமா பாத்துக்கோ என சொல்ல, அதைக்கேட்டு பதறிப்போன தாரா, அவசர அவசரமாக வீட்டுக்கு சென்று நந்தினிடம் சொல்கிறார். பின்னர் நந்தினிக்கும் போன் போட்டு எமோஷனலாக பேசும் கதிர், தான் வெளிமாநிலத்துக்கு செல்ல இருப்பதாக கூறுகிறார். தன் தந்தை மீதுள்ள பாசத்தில், அப்பத்தாவிடம் சென்று பேசும் தாரா, எங்க அப்பாவை பிடிக்க வேண்டாம்னு சொல்லுங்க என கண்ணீர்விட்டு கதறுகிறார். அதற்கு விசாலாட்சி, உங்க அப்பா செஞ்சது தப்புமா என கூறுகிறார்.
34
உஷாரான ஜனனி
மறுபுறம் கதிர், நந்தினிக்கு போன் போட்டு பேசியபோது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை டிராக் செய்து தெரிந்துகொண்ட கொற்றவை, ஜனனிடம் இதுதொடர்பாக பேசுகிறார். அப்போது ஜனனி, நம்மை எல்லாம் டைவர்ட் பண்ணிவிடுவதற்காக தான் அவர்கள் இப்படி ஒரு பிளானை போட்டிருக்கிறார்கள். எல்லாரும் சென்னையில் இருந்து கிளம்பி தமிழ்நாட்டிற்குள் எங்காவது செல்ல தான் பிளான் போட்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம் அதிகம். நம்மை திசை திருப்பிவிடுவதற்காக தான் அவர்கள் இப்படி ஒரு பொய்யை சொல்லி இருப்பார்கள் என கொற்றவையிடம் கூறுகிறார்.
சென்னையில் இருந்து தப்பித்து செல்லும் ஆதி குணசேகரன், செல்லும் வழியில் போலீஸ் இருப்பதை பார்த்ததும் வேகமாக போகச் சொல்கிறார். இவர்கள் வருவதை பார்த்த போலீஸ் பேரிகார்டு போட்டு தடுத்துவிடுகிறார்கள். இதனால் வேறு வழியின்றி ஆதி குணசேகரன் போலீஸிடம் சிக்குகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனை போலீஸார் அரெஸ்ட் பண்ணினார்களா? இல்லையெனில் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தன்னுடைய தம்பிகளுடன் ஆதி குணசேகரன் தப்பித்து சென்றுவிட்டாரா? என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தான் கிடைக்கும்.