தடபுடலாக நடந்த ‘கலக்கப்போவது யாரு’ புகழ் தீனாவின் திருமணம்.... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

First Published | Jun 1, 2023, 1:31 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தீனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. அதில் சரத் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி கலாட்டா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் ஷோக்களில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களுக்கு போனில் அழைத்து அவர்களை சரமாரியாக கலாய்த்து தள்ளி வந்தார் தீனா. அவரின் டைமிங் காமெடி வேறலெவலில் ரீச் ஆனது.

சின்னத்திரையில் கலக்கி வந்த தீனா, முதன்முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் தும்பா. தர்ஷன் நாயகனாக நடித்த இப்படத்தில் அவரின் நண்பனாக நடித்திருந்தார் சரத். இப்படத்திலும் காமெடி காட்சிகள் ஹிட் அடித்தன. இதையடுத்து தீனாவுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் படம் முழுக்க கார்த்தியுடனே பயணிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார் தீனா.

இதையும் படியுங்கள்... பிகினி உடையணிந்து மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்த கண்ணழகி பிரியா வாரியர்... வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Tap to resize

கைதி படத்துக்கு பின்னர் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தீனா. மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து அசத்தினார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் சினிமாவில் தீனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இதனால் படிப்படியாக வளர்ந்து வந்த தீனா, அண்மையில் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்கில் பிரம்மாண்டமான மாடி வீடு கட்டி பால்காய்ச்சினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், புது வீடு கட்டிய கையோடு நடிகர் தீனாவுக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அவர் பிரகதி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஒரு கிராபிக் டிசைனர் ஆவார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்களது திருமணத்தில் கலக்கப்போவது யாரு சரத் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். தீனாவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பாபா ராம்தேவ் மாதிரி இருப்பதாக கிண்டலடித்த நெட்டிசன்கள்.. சட்டென முடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலுக்கு மாறிய தனுஷ்

Latest Videos

click me!