மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்

Published : Feb 02, 2026, 03:20 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில், காரில் ஜோடியாக வந்துகொண்டிருந்த விஜய் மற்றும் காவேரி விபத்தில் சிக்கி உள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Mahanadhi Serial Today Episode

மகாநதி சீரியலின் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. காவேரியும் விஜய்யும் மகாபலிபுரத்தில் ரூம் போட்டு தங்கி இருக்கிறார்கள். பழசை எல்லாம் நினைத்து விஜய் மிகவும் சோகமாக இருக்கிறார். பிறந்த உடனே தன்னோட அப்பாவும், அம்மாவும் தன்னைவிட்டு போய்விட்டார்கள் என்பதை சொல்லி காவேரியிடம் ஃபீல் பண்ணி பேசுகிறார் விஜய். அவரை ஆறுதல் படுத்தும் விதமாக பேசும் காவேரி, இதுக்கப்புறம் உங்க குழந்தை வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என சொல்கிறார். இதன்பின்னர் இருவரும் ஜோடியாக பீச்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்

24
ஆபத்தை உணரும் காவேரி

அப்போது சோகத்துடன் இருக்கிறார் காவேரி. என்ன ஆச்சு என விஜய் கேட்க, நமக்கு ஏதோ நடக்கப்போகுதுனு காவேரி சொல்கிறார். எதனால அப்படி சொல்லுற என விஜய் கேட்க, தன்னோட அப்பா கனவில் வந்ததாக சொல்லும் காவேரி, அதனால் நமக்கு ஏதோ நடக்கப்போகுதுங்குற அறிகுறி தெரிவதாக கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் நடக்காது, வா கிளம்பலாம் என சொல்லி அவரை அங்கிருந்து அழைத்து செல்லும் விஜய், பின்னர் காரில் காவேரி உடன் கிளம்புகிறார். காவேரியின் உள் உணர்வு சொன்னதுபோல் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதற்கு காரணம் ராகவ் தான்.

34
விபத்தில் சிக்கிய விஜய் - காவேரி

காவேரியையும், விஜய்யையும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்கிற முனைப்போடு இருந்த ராகவ், அதற்கு இதுதான் சரியான நேரம் என முடிவெடுத்து ஒரு லாரியை ஏற்பாடு செய்து அதனை விஜய் - காவேரி செல்லும் காரின் பின்னார் பாலோ பண்ண அனுப்புகிறார். அந்த லாரி ஓட்டுநர் போன் பண்ணி விசாரித்துக் கொண்டே இருக்கும் ராகவ், ஒருகட்டத்தில் அடிச்சு தூக்கச் சொல்ல, அந்த லாரி டிரைவரும் வேகமாக வந்து விஜய்யின் காரின் மீது மோதுகிறார். இதனால் விஜய் - காவேரி இருவரும் தூக்கிவீசப்பட்டு, சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். இதையடுத்து அந்த லாரி வேகமாக சென்றுவிடுகிறது.

44
இருவரும் உயிர்பிழைப்பார்களா?

ராகவ்வின் பிளான் சக்சஸ் ஆனதை தொடர்ந்து அந்த லாரி டிரைவர் ராகவ்விற்கு போன் போட்டு விஜய் - காவேரி வந்த காரை மோதிவிட்டதாக கூறுகிறார். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜய்யையும், காவேரியையும் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி இரண்டு பேரின் கதையையும் முடிக்க பிளான் போட்ட இயக்குநர், ஒருவேளை இந்த சீரியலையும் முடிக்கப் போகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories