எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, ரெளடிகளிடம் இருந்து தப்பித்து ஓடிவரும் போது கார் ஒன்று அவர் மீது மோதுகிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ரெளடிகளிடம் இருந்து தப்பிக்க ஒரு மோட்டார் அறையில் ஒளிந்துகொண்ட நிலையில், அதை தோட்டத்து ஓனர் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து வெளியே வர ஜனனி முயன்றுகொண்டிருந்த போது அந்த ஓனரே வந்து கதவை திறந்துவிடுகிறார். அப்போது அங்கிருந்து தப்பித்து மெய்ன் ரோட்டுக்கு வரும் ஜனனியை ரெளடிகள் மீண்டும் மடக்குகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடிய ஜனனி, ஒரு காரின் மீது மோதி மயக்கம் போட்டு விழுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஜனனியை காப்பாற்றும் கேப்டன்
ஜனனியை காரில் இடித்த நபரே அவரை ரெளடிகளிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் பெயர் ஆலிவர் தேவசகாயம். அவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் ஆவார். அவர் காரில் அடிபட்டதால் அவர் ரெளடிகளை அடித்து விரட்டிவிட்டு ஜனனியை காப்பாற்றி இருக்கிறார். ஜனனி மயக்கத்தில் இருந்ததால் அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் இருந்தது. மயக்கம் தெளிந்த பின்னர் தேவசகாயத்தை சந்தித்து பேசுகிறார். அப்போது தான் அவர் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். நீங்கள் பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது, உங்களுக்கு பிரச்சனை இல்லேனா சொல்லுங்க என கேட்கிறார். ஜனனியும் அவரிடம் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
35
விவாகரத்துக்கு நந்தினி - ரேணுகா போட்ட கண்டிஷன்
மறுபுறம் வீட்டில் தன் தம்பிகளை உசுப்பேற்றிவிட்ட ஆதி குணசேகரன், உங்கள் பொண்டாட்டிகளை விவாகரத்து செய்யுமாறு சொல்ல, அதற்கு மறுபேச்சு எதுவும் பேசாமல், ஓகே சொல்லும் கதிர் மற்றும் ஞானம், கீழே இறங்கி வந்து ரேணுகா மற்றும் நந்தினியை அழைத்து தாங்கள் உங்களை விவாகரத்து செய்து பிரிய இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஓகே சொல்லும் நந்தினி மற்றும் ரேணுகா ஒரு கண்டிஷனையும் போடுகிறார்கள். நம் கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யப்படாவிட்டாலும், உன்னுடைய சொந்த பந்தங்கள் மத்தியில் தான் நடந்தது. அவர்கள் முன்னிலையில் தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவோம் என கூறுகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற கதிர் மற்றும் ஞானம் தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்து வீட்டுக்கு வர வைக்கிறார்கள். அப்போது அனைவர் முன்னிலையிலும் டைவர்ஸ் பேப்பரை படிக்கிறார்கள் ரேணுகா மற்றும் நந்தினி. திருமண வாழ்க்கையில் ஒற்றுமை இன்றி இருப்பதால் நாங்கள் எங்கள் கணவரை பிரிந்து செல்கிறோம் என நந்தினியும், ரேணுகாவும் சொல்ல, அனைத்து சொந்தங்களும் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
55
ஆபத்து யாருக்கு?
மகன்களின் இந்த முடிவால் புலம்பும் விசாலாட்சி, என் தம்பி அப்பவே சொன்னான், உன் மூத்த மகன் வீட்டுக்கு வந்தால் பெரிய ஆபத்து நடக்கப்போதுனு சொன்னான். கதிரும், ஜனனிக்கு தான் ஆபத்து என சூசகமாக சொல்கிறார். அநேகமாக ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் மூலம் தான் ஆதி குணசேகரனுக்கு ஆபத்து வரப் போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.