விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலை பிரவீன் பென்னட் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் சரவணன் மீனாட்சி சீசன் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சூப்பர் ஹிட் தொடர்களையெல்லாம் இயக்கி இருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் மகாநதி சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தந்தையை இழந்த நான்கு மகள்களைப் பற்றிய கதை தான் இந்த மகாநதி. இந்த சீரியலில் இருந்து நடிகைகள் விலகுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் யமுனா கேரக்டரில் நடிக்கும் ஆதிரை விலகிய நிலையில், இம்மாதம் மேலும் ஒரு நடிகை விலகி இருக்கிறார்.
24
மகாநதி சீரியலில் இருந்து விலகியது யார்?
அந்த வகையில் மகாநதி சீரியலில் இருந்து தற்போது விலகி இருப்பது வேறுயாருமில்லை நடிகை வைஷாலி தனிகா தான். இவர் இந்த சீரியலில் வெண்ணிலா என்கிற கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருப்பதன் காரணமாக மகாநதி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் வைஷாலி. தன்னுடைய கடைசி நாள் ஷூட்டிங்கின் போது அனைவரிடமும் தன்னுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கேட்டு, அதை ஒரு வீடியோவாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைஷாலி. மேலும் தான் எந்தவித குறையும் இன்றி சந்தோஷமாக இந்த சீரியலை விட்டு விலகுவதாக வைஷாலி கூறி உள்ளார்.
34
கர்ப்பமான வெண்ணிலா கேரக்டர் நடிகைகள்
மகாநதி சீரியலில் முதன்முதலில் வெண்ணிலா கேரக்டரில் நடித்தது கண்மணி மனோகரன் தான். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாநதி சீரியலை விட்டு விலகினார். ஏனெனில் கடந்த ஆண்டு அஸ்வத்தை திருமணம் செய்துகொண்ட கண்மணி, தான் கர்ப்பமானதன் காரணமாக அந்த சீரியலை விட்டு விலகினார். அதன்பின்னர் அந்த கேரக்டரில் நடிக்க வைஷாலி தனிகா கமிட்டானார். அவர் இந்த சீரியலில் நடிக்க தொடங்கி 10 மாதங்கள் தான் ஆகிறது. தற்போது அவரும் கர்ப்பமாக இருப்பதால் வேறுவழியின்றி இந்த சீரியலை விட்டு விலகும் சூழல் உருவாகி இருக்கிறது. இனி இவரின் கதாபாத்திரம் இந்த சீரியலில் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.
மகாநதி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் ஸ்வாமியும், ஹீரோயினாக நடிக்கும் லட்சுமி பிரியாவும் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், இந்த சீரியலில் இடம்பெற்ற மற்ற கதாபாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் கங்கா கேரக்டரில் முதலில் பிரதீபா நடித்தார். அவர் விலகியதை அடுத்து திவ்யா கணேஷ் நடித்தார். அவரும் விலகியதால் தற்போது தாரணி நடித்து வருகிறார். அதேபோல் யமுனா கேரக்டரில் ஆதிரைக்கு பதில் ஸ்வேதா நடிக்கிறார். அந்த வகையில் வெண்ணிலா கேரக்டரில் நடித்து வந்த கண்மணி விலகியதை அடுத்து வைஷாலி நடித்தார். தற்போது அவரும் விலகி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து இந்த சீரியலில் நடிகைகள் விலகி வருவதால் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.