சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத தொடர் என்றால் அது எதிர்நீச்சல் தான். இதன் முதல் சீசனை போல் தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனும் செம விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முதல் சீசனில் ஆதிரை - கரிகாலன் இடையேயான திருமண எபிசோடில் இருந்து தான் அந்த சீரியல் பிக் அப் ஆனது. அதேபோல் தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனின் திருமண எபிசோடு தொடங்கியதில் இருந்தே அதன் கதைக்களமும் சூடுபிடிக்க தொடங்கியது. தர்ஷனை திருமணம் செய்துகொள்ளப்போவது அன்புக்கரசியா? அல்லது பார்கவியா? என்கிற விறுவிறுப்பான கட்டத்தை சீரியல் நெருங்கி உள்ளது.
24
ஸ்டார்ட் ஆன தர்ஷன் திருமண வேலைகள்
தர்ஷனுக்கு அன்புக்கரசியை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார் ஆதி குணசேகரன். மறுபுறம் தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜனனி, ஈஸ்வரி, நந்தினி ஆகியோர் போராடி வருகிறார்கள். ஆதி குணசேகரன், பார்கவியை எச்சரித்து அனுப்பியதை அடுத்து, அவரை அழைத்துக் கொண்டு ஜீவானந்தம் கும்பகோணம் சென்றுவிட்டார். தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சிம் கார்டை உடைத்து எறிந்துவிட்டு, செல்கிறார். இதுதெரியாமல் ஜனனி, ஈஸ்வரி ஆகியோர் ஜீவானந்தத்தை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
34
ஜீவானந்தத்தை கண்டுபிடிக்கும் ஜனனி
ஜீவானந்தத்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் தர்ஷன் பதறுகிறார். மறுபுறம் பார்கவியை கனடாவுக்கு படிக்க அனுப்ப திட்டமிடுகிறார் ஜீவானந்தம். இதற்காக பார்கவியை கும்பகோணத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர் வீட்டில் தங்க வைக்கிறார். இன்றைய எபிசோடில் பார்கவிக்கு கனடா செல்ல விசா கிடைத்துவிடுகிறது. இதனால் ஜீவானந்தம் சந்தோஷமடைய, மறுபுறம் ஜனனி ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக ஈஸ்வரியிடம் கூறுகிறார். கும்பகோணத்தில் இருக்கும் ஜீவானந்தத்தை ஜனனி கண்டுபிடித்தது ஒரு தனிக்கதை.
குருநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு செல்லும் ஜனனி, அங்கு அந்த வீட்டின் உரிமையாளரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் வீட்டின் உள்ளே அமர்ந்திருந்தபோது டிவியில் கும்பகோணம் மகா மகம் குளம் அருகே எடுத்த வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஜீவானந்தம், பார்கவி ஆகியோர் நடந்து வரும் காட்சியும் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஜனனி. இவர்கள் எதற்காக கும்பகோணம் சென்றார்கள் என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கும் ஜனனி, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.