சின்னத்திரை சீரியல்களில் சன் டிவிக்கு அடுத்தபடியாக டாப்பில் இருப்பது விஜய் டிவி தான். அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் முதலிடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், வார வாரம் வெளியாகும் டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்களுக்கு செம டஃப் கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் நேற்று தீபன் குடும்பத்தினரிடம் பிரச்சனை செய்ததாக கூறி முத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
24
சிறையில் அடைக்கப்பட்ட முத்து
இந்த நிலையில், இன்றைய எபிசோடில், சிட்டியுடைய ஆட்கள் தான் தங்களை அடித்ததாக தீபன், மீனாவிடம் சொல்ல, அவர் போலீசிடம் இதுபற்றி புகார் கொடுக்கிறார். உடனே போலீசார் ரெளடி சிட்டியை கைது செய்து விசாரணைக்காக அழைத்து வருகிறார்கள். முதலில் சரிவர பதிலளிக்காமல் இருக்கும் சிட்டியை போலீசார் தங்கள் பாணியில் அடித்து விசாரிக்கும் போது சிட்டி உண்மையை உளறிவிடுகிறான். அதன்படி ரோகிணி தான் இதையெல்லாம் பண்ண சொன்னார் என்கிற உண்மையை கூறிவிடுகிறான். இதனால் ஷாக் ஆன மீனா, ரோகிணி மீது செம கோபத்தில் வீட்டுக்கு செல்கிறார்.
34
ரோகிணியை சிக்க வைத்த சிட்டி
அப்போது வீட்டில் இருக்கும் அனைவரிடமும், ரோகிணி தான் தீபக் குடும்பத்தை ஆள்வைத்து அடித்ததாகவும், இவர் செய்த வேலையால் தான் தன்னுடைய கணவர் முத்துவை போலீசார் கைது செய்ததாக சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் வீட்டுக்குள் போலீஸ் எண்ட்ரி கொடுக்கிறார்கள். ஒரு குடும்பத்தையே ஆள் வைத்து அடித்த குற்றத்திற்காக ரோகிணியை கைது செய்வதாக கூறுகிறார்கள். ரோகிணியை போலீசார் கைது செய்தபோது அவர் மீது செம கோபத்தில் இருக்கும் வித்யா, இதுக்கப்புறம் இவள் நம்ம குடும்பத்துக்கே தேவையில்லை என கூறுகிறார்.
முதலில் தான் ஒரு பெரிய பணக்காரி என பொய் சொன்னால், பிறகு நகையெல்லாம் திருடினால், இப்போ என்னன்னா அடியாட்களை ஏவி எல்லாரையும் அடிக்கிறாள். இன்னும் என்னவெல்லாம் மறைச்சி வச்சிருக்காளோ தெரியல. இதுக்கப்புறமும் இவளை வீட்டுக்குள் விட்டோம்னா என்னோட உயிருக்கு பாதுகாப்பு இல்ல. அதனால் இனி ரோகிணியை வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் வித்யா. இதனால் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதன்பின் என்ன ஆனது? முத்து விடுதலை ஆனாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.