நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்

Published : Dec 13, 2025, 01:07 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் சுந்தரவள்ளியின் எதிர்ப்பை மீறி நந்தினியிடம் கம்பெனியை ஒப்படைக்கிறார் சூர்யா. அதன்பின் என்ன ஆனது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Moondru Mudichu Serial Today Episode

சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக மூன்று முடிச்சு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக நியாஸும், ஹீரோயினாக ஸ்வாதி கொண்டேவும் நடிக்கின்றனர். இந்த தொடரின் வில்லியாக சுந்தரவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார். இந்த சீரியல் தான் தற்போது தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடித்திருக்கிறது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
நந்தினியிடம் கம்பெனியை ஒப்படைக்கும் சூர்யா

சூர்யாவையும் நந்தினியையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என சுந்தரவள்ளி கங்கணம் கட்டிக் கொண்டிருக்க, சூர்யா, நந்தினி மீது காட்டும் அன்பால் வீடே ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முக்கிய முடிவெடுக்கும் சூர்யா, காயப்பட்ட என்னுடைய காலையே சரிபண்ணிய நந்தினி கண்டிப்பா நம்முடைய கம்பெனியையும் தூக்கி நிப்பாட்டுவா என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தன்னுடைய தந்தையிடம் கூறுகிறார். இதைக்கேட்டு கடுப்பான சுந்தரவள்ளி, நந்தினியை கம்பெனியில் உட்கார வைத்தால் கம்பெனியோட பேரு கெட்டுவிடும் என எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.

34
சூர்யாவின் முடிவுக்கு சுந்தரவள்ளி எதிர்ப்பு

மத்தளத்துக்கு ரெண்டு பக்கத்திலும் அடி விழுவது போல், சூர்யா - சுந்தரவள்ளி இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார் நந்தினி. அவளை கம்பெனிக்கு அனுப்புவதை விட்டுவிட்டு ஒழுங்குமரியாதையா பத்து பாத்திரத்தை கழுவ சொல்லு என சூர்யாவிடம் கறாராக பேசுகிறார் சுந்தரவள்ளி. அதை முதல்ல நீங்க கத்துக்கோங்க என பதிலடி கொடுக்கிறார் சூர்யா. 6 மாதத்திற்கு கம்பெனி பக்கமே வராமல் இருங்க என சூர்யா சொல்ல, அவகிட்ட 6 மாசம் கம்பெனியை கொடுத்தால் நாறிவிடும் என சுந்தரவள்ளி, சூர்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.

44
குழப்பத்தில் நந்தினி

நீங்க கம்பெனி பக்கமே வராம இருங்க, நாறுதா? இல்லை மனக்குதானு பாப்போம். சேலஞ்சுக்கு ரெடியா என சூர்யா கேட்க, அதற்கு சுந்தரவள்ளி, பாத்துரலாமா என எகிறுகிறார். மறுபுறம் ஆபிஸுக்கு சென்ற நந்தினி, சூர்யாவின் நம்பிக்கையை காப்பாற்றி, சுந்தரவள்ளியின் கோபத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்கிற குழப்பத்தில் இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது? கம்பெனியை திறம்பட நடத்திக்காட்டுவாரா நந்தினி? சவாலிலி வெல்லப்போவது சுந்தரவள்ளியா? சூர்யாவா? என்கிற அடுக்கடுக்கான திருப்பங்களுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories