பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாம், அதனால் அதில் கம்மியான வாக்குகளை வாங்கி எலிமினேட் ஆகப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. ஆனால் தற்போது வரை யார் டைட்டில் வெல்வார்கள் என்பது உறுதியாகவில்லை. பிக் பாஸ் வரலாற்றிலேயே மிக மோசமான சீசன் என்கிற பெயரையும் இந்த சீசன் எடுத்துள்ளது. மொத்தம் 20 போட்டியாளர்கள், 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என 24 பேருடன் இந்த சீசன் நடைபெற்றது. இதில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் ஆக உள்ளார்களாம்.
24
பிக் பாஸ் டபுள் எவிக்ஷன்
இந்த வாரம் நாமினேஷனில் வினோத், சபரி, கம்ருதீன், சாண்ட்ரா, எஃப்.ஜே, வியானா, ரம்யா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இவர்களில் இருந்து இருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அதில் வினோத் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை. அவருக்கு அடுத்தபடியாக சபரி, சாண்ட்ரா மற்றும் கம்ருதீன் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எஞ்சியுள்ள வியானா, எஃப் ஜே, ரம்யா ஆகிய மூவர் தான் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள்.
34
எலிமினேட் ஆகப்போவது யார்?
இந்த மூவரில் ரம்யா ஜோ கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார். ஏனெனில் கடந்த வாரமே விஜய் சேதுபதியால் மிகவும் ரோஸ்ட் செய்யப்பட்டார். அவர் எலிமினேட் ஆவது உறுதியாகி உள்ளது. எஞ்சியுள்ள காதல் ஜோடியில் ஒருவர் வெளியேறப்போகிறார்கள். அது வியானாவா அல்லது எஃப் ஜே-வா என்பது கடைசி நேர ட்விஸ்டாக இருக்கும். வியானா எலிமினேட் ஆனால் எஃப் ஜேவின் கேம் மாற வாய்ப்பு உள்ளது. அதேபோல் எஃப் ஜே வெளியேறினால் வியானாவின் ஆட்டத்தில் மாற்றம் இருக்கும் என்பதால், இந்த காதல் ஜோடியின் பிரிவுக்கு பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க சான்ஸ் இருக்கு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மோஸ்ட் இரிடேட்டிங் ஜோடியாக பார்வதி மற்றும் கம்ருதீன் இருந்துள்ளனர். அதிகமுறை ரூல் பிரேக் செய்ததால் வீட்டில் உள்ள அனைவருக்குமான பால், முட்டை உள்ளிட்ட பொருட்களை பிக் பாஸ் எடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி சக போட்டியாளர்களிடம் கெட்ட வார்த்தையில் பேசுவது, மாக்கிங் செய்வது என எல்லைமீறி செல்வதால் இவர்கள் இருவரை எலிமினேட் செய்ய வேண்டும் என்கிற குரல் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கி உள்ளது. பார்வதி இந்த வாரம் நாமினேஷனில் இல்லாவிட்டாலும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுமாறு நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.