எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை தொடங்கவிடாமல் தடுக்க அறிவுக்கரசி போட்ட பிளானை சுக்குறூறாக உடைத்துள்ளார் தர்ஷினி. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கொடுத்த புகாரின் பேரில் ஆதி குணசேகரனையும் அவரது தம்பிகளையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வருகிறது. அவர்கள் பாண்டிச்சேரியில் இருப்பது தெரிந்ததும், அவர்களை பிடிக்க கொற்றவை அங்கு விரைந்த நிலையில், அவர்கள் செல்வதற்குள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர். இதையடுத்து ஆதி குணசேகரன் சென்னையில் ஒரு ரிசார்ட்டில் தலைமறைவாகி இருக்கிறார். அவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவுக்கரசி மூலம் கேட்டு தெரிந்துகொள்வதோடு, சில சூழ்ச்சி வேலைகளையும் செய்து வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரன் போட்ட உத்தரவு
ஜனனியின் தமிழ் சோறு பிசினஸுக்கு முட்டுக்கட்டை போட நினைத்து லைசன்ஸ் கொடுக்க வந்த ஆபிசரிடம் அறிவுக்கரசி கொளுத்திப்போட்ட நிலையில், அவரை காசு கொடுத்து தங்கள் வழிக்கு கொண்டு வந்திருக்கிறார் ஜனனி. அந்த ஆபிஸரும் காசை வாங்கிக் கொண்டு, தமிழ் சோறு பிசினஸுக்கு லைசன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் அறிந்த அறிவுக்கரசி ஷாக் ஆகி அதனை ஆதி குணசேகரனிடம் சொல்ல, அவர் அவரை திட்டுவதோடு, நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவர்கள் பிசினஸ் தொடங்க விடாமல் தடுப்பது உன்னோட வேலை என ஆர்டர் போட்டு போனை வைக்கிறார்.
34
அறிவுக்கரசிக்கு வந்த ஐடியா
இதையடுத்து யோசித்து வந்த அறிவுக்கரசிக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. வண்டி இருந்தால் தானே ஃபுட் டிரக் பிசினஸ் ஆரம்பிக்க முடியும், அதையே கொளுத்திவிட்டால், என்ன பண்ணுவாங்க என முல்லையிடம் பேசி, அவர்கள் ஃபுட் டிரக் பிசினஸுக்காக வைத்திருக்கும் வண்டியை இரவோடு இரவாக கொளுத்த பிளான் போடுகிறார். இதற்காக முல்லையிடம் மண்ணெண்ணய் வாங்கி கொடுத்து அனைவரும் தூங்கும் நேரத்தில், அந்த வண்டியை கொளுத்திவிட திட்டம் போடுகிறார். முல்லையும் மாறு வேடத்தில் வந்து அந்த வண்டி மீது மண்ணெண்ணய்யை ஊற்றி கொளுத்த ஆயத்தமாகிறார்.
அப்போது தான் முல்லைக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தீப்பெட்டியை எடுக்கும் கேப்பில், அந்த வண்டிக்குள் இருந்து படார் என கதவை திறந்து முல்லைக்கு ஒரு மிதி கொடுக்கிறார் தர்ஷினி. நீங்க இப்படியெல்லாம் செய்வீங்கனு தான் நான் இங்க இருந்தேன் என்று சொல்லி முல்லையை அடிவெளுக்கிறார். அதற்குள் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்துவிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என அறிவுக்கரசி நைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் அந்த வண்டி தப்பித்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.