முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Dec 13, 2025, 09:49 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிடம் கிரிஷை தத்தெடுக்க சம்மதிகாததற்கான காரணத்தை கூறாததால் குற்ற உணர்ச்சியில் குமுறுகிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, கிரிஷை தத்தெடுக்கும் ஆசையில் மீனாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற நிலையில், அங்கு முத்துவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனா, நம்மால் கிரிஷை தத்தெடுக்க முடியாது என்றும், அதற்கான காரணத்தை தற்போது சொல்ல மாட்டேன் என்றும் கோபத்துடன் சொல்லிவிட, இதனால் அப்செட் ஆன முத்து, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஃபுல்லாக குடிக்கிறார். மீனா ஏன் கிரிஷை தத்தெடுக்க சம்மதிக்கவில்லை என்கிற கேள்வி முத்துவை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
மீனா - முத்து இடையே வாக்குவாதம்

இதையடுத்து வீட்டில் தனியாக அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருக்கிறார் மீனா, அப்போது ஃபுல் போதையில் வீட்டுக்கு வருகிறார் முத்து. வந்த கையோடு, பேக் ஒன்றை எடுத்து மீனாவின் துணிகளை எல்லாம் உள்ளே வைக்கிறார். ஏன் இப்படி பண்றீங்க என மீனா கேட்க, நான் ஃபுல்லா குடிச்சிட்டு வந்திருக்கேன். எப்படி இருந்தாலும் நீ உங்க அம்மா வீட்டுக்கு போவ, அதான் நானே எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்கிறேன் என சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் நீங்க சாப்பிட வாங்க என மீனா கூப்பிட, முத்து கன்பியூஸ் ஆகிறார். பின்னர் மீனாவுக்கும் முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.

34
ரோகிணியிடம் சண்டைபோடும் மீனா

கிரிஷை தத்தெடுக்க சம்மதிக்காததால், மீனாவை சாடும் முத்து, நீ கிரிஷ் மீது காட்டும் பாசமெல்லாம் பொய் என கூறுவதோடு, அவருடன் சண்டை போட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். இதையடுத்து இரவில் ரோகிணிக்கு போன் போடும் மீனா, உன்னால தான் எனக்கும் அவருக்கும் இப்போ சண்டை வந்திருக்கு என சொல்ல, என்ன நடந்தது என ரோகிணி கேட்கிறார். அதற்கு கிரிஷை தத்தெடுக்க முத்து ஆசைப்பட்ட விஷயத்தை மீனா சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் விஜயா, வருகிறார். என்னவென்று கேட்டபோது ரோகிணி ஒரு பொய்யை சொல்ல, அதைப்பார்த்து மீனா வாயடைத்துப் போகிறார்.

44
கிரிஷுக்கு பாராட்டு

கிரிஷை காப்பாற்ற இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொய் சொல்ல போற என மீனா கேட்கிறார். பின்னர் மறுநாள் மனோஜை ஓவியமாக வரைந்து, அந்த பேப்பரை கிரிஷிடம் கொடுத்து இதை நீ வரைந்ததாக சொல் என கூறுகிறார் ரோகிணி. அவனும் அப்படியே சொல்ல மனோஜ், அண்ணாமலை, முத்து, ஸ்ருதி ஆகியோர் கிரிஷை பாராட்டுகிறார். விஜயா மட்டும் அந்த ஓவியத்தை பார்த்து விமர்சிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது? மனோஜுடன் கிரிஷை நெருங்கி பழக வைக்க ரோகிணி அடுத்ததாக என்ன முயற்சி எடுக்கப்போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories