பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. அது என்னென்ன சீரியல்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சின்னத்திரையில் சன் டிவி தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. சீரியல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சன் டிவி தான். ஒரு காலத்தில் சீரியல்களில் தனிக்காட்டு ராஜாவாக சன் டிவி இருந்து வந்தது. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என பல்வேறு சேனல்கள் போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பினாலும், சன் டிவி தான் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது. தற்போது டிஆர்பி ரேஸிலும் சன் டிவி தொடர்ச்சியாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. சன் டிவியில் காலை தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
24
முடிவுக்கு வரும் 2 சீரியல்கள்
அந்த வகையில் சன் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு சூப்பர்ஹிட் சீரியல்கள் வருகிற ஜனவரி மாதம் முடிவுக்கு வர உள்ளன. இந்த இரண்டு சீரியல்களும் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகள் ஓடிவிட்டன. இதில் ஒரு சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்துவிட்டது. மற்றொரு சீரியல் ஆயிரம் எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இந்த இரண்டு சீரியல்களும் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அது என்னென்ன சீரியல்கள்? எந்த தேதியில் முடிவடைய உள்ளது என்பது பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
34
இலக்கியா சீரியலுக்கு எண்டு கார்டு
அதில் ஒன்று இலக்கியா சீரியல். சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் சாம்பவி குருமூர்த்தி நாயகியாகவும், நந்தன் லோகநாதன் நாயகனாகவும் நடித்து வந்தனர். இந்த சீரியலை சரிகமா நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது இந்த சீரியல் 970 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், வருகிற ஜனவரி 17-ந் தேதி உடன் முடிவுக்கு வர உள்ளது.
ஜனவரி 17-ந் தேதி முடிவடைய உள்ள மற்றொரு சீரியல் ஆனந்த ராகம். இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் அண்மையில் தான் ஆயிரம் எபிசோடுகளை கடந்தது. சன் டிவியில் வெற்றிகரமாக ஓடி வந்த சீரியல்களில் இதுவும் ஒன்று. மாலை நேரத்தில் இருந்து மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டதால், இதற்கான வரவேற்பு குறைந்தது. இதனால் இந்த சீரியலை இழுத்து மூட முடிவெடுத்து உள்ளனர். இந்த சீரியலில் அழகப்பன் நாயகனாகவும், அனுஷா ஹெக்டே நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் முடிந்ததும் இருமலர்கள் என்கிற சீரியல் புதிதாக களமிறக்கப்பட இருக்கிறது.