சொத்து மேட்டரில் வில்லங்க முடிவெடுத்த மனோஜ்... காணாமல் போகும் அண்ணாமலை - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Dec 31, 2025, 09:49 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் சொத்துக்காக சண்டை போட்ட நிலையில், அவனுக்கு சொத்தை பிரித்து தர அண்ணாமலை முடிவு செய்துவிட்டு வீட்டை விட்டு தொலைந்து போகிறார்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக சொத்தை பிரித்து தனக்கு சேர வேண்டியதை கொடுக்குமாறு கேட்கிறார். மனோஜ் கேட்டதும் அண்ணாமலையும் சொத்தை பிரித்து எழுதிக் கொடுக்க சம்மதித்து, அதற்காக வக்கீலையும் வர வைக்கிறார். ஆனால் அண்ணாமலையில் மற்ற இரண்டு மகன்களான ரவியும், முத்துவும் சொத்தை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஜயாவுக்கும் இதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இப்படி ஒருவர் சம்மதித்து மற்றவர் எதிர்த்தால், சொத்தை பிரித்து எழுத முடியாது என கூறிவிட்டு வக்கீல் சென்றுவிடுகிறார்.

24
மனோஜ் கொடுக்கும் ட்விஸ்ட்

முத்து மற்றும் ரவி சொத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால், விரக்தி அடையும் மனோஜ், யப்பா... சாமி மொத்தமா எல்லாத்தையும் நீங்களே வச்சிக்கோங்கடா எனக்கு எதுவுமே வேண்டாம், அப்பா சொத்தை நீங்க பிரிக்க வேண்டாம். உங்ககிட்ட நான் எதுவுமே கேட்கல, ஆனா நான் சொத்தைக்கேட்டு ஏதாவது கேஸ் போட்டேன்னா, யாரும் என்னை எதுவும் கேட்காதீங்க என சொல்கிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். என்னது கேஸ் போடுவியா என முத்து, மனோஜை அடிக்க பாய்கிறார். பின்னர் அவர்கள் இருவரையும் மீனா, ரோகிணி, ஸ்ருதி ஆகியோர் பிரித்துவிடுகிறார்கள்.

34
வீட்டை விட்டு சென்ற அண்ணாமலை

இதையடுத்து மறுநாள் காலையில், விஜயா ரூமில் இருந்து வெளியே வரும்போது மாமா எங்க என மீனா கேட்க, அவர் வாக்கிங் போயிருப்பார் என விஜயா சொல்கிறார். வெகுநேரம் ஆகியும் வராததால் பதறிப்போன மீனா, முத்துவிடம் சொல்ல, அவர் அண்ணாமலையின் நண்பர்களுக்கு போன் போட்டு பேசுகிறார். பின்னர் சாமி ரூமில் ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கும் மீனா, அதை எடுத்து படிக்கும்போது தான் அண்ணாமலை இந்த வீட்டை விட்டு சென்றது தெரிகிறது. அதில் என்னை யாரும் தேட வேண்டாம், நான் நல்லா தான் இருக்கேன், யாரும் பயப்படாதீங்க, நேரம் வரும்போது நானே வந்துவிடுவேன் என எழுதி இருக்கிறார்.

44
ரோகிணியிடம் சண்டை போடும் மனோஜ்

உன்னால் தான் அப்பா வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்று சொல்லி அனைவரும் மனோஜை திட்டுகிறார்கள். இதையடுத்து ரோகிணியை ரூமுக்குள் அழைத்து சென்று பேசும் மனோஜ், இப்போ எல்லா பிரச்சனையும் உன்னால தான் என சொல்லி சண்டை போடுகிறார். நீ வாங்கிக் கொடுத்த ஆர்டரால் தான் இப்படி ஆனது என திட்டுகிறார். உங்க அப்பா போனதை பத்தி நீ கவலைப்பட மாட்டியா என ரோகிணி கேட்க, எதுக்கு கவலைப்படனும், எனக்கு சொத்தை பிரிச்சு கொடுக்க கூடாதுனு தான் கிளம்பி போயிருக்காரு என மனோஜ் சொல்ல, ஷாக் ஆகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories