எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கியதை அறிந்த ஆதி குணசேகரன், தன்னுடைய அடியாளுக்கு போன் போட்டு சோலியை முடிக்க சொல்லி உத்தரவிடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை தொடங்க வேண்டும் என்பது ஈஸ்வரியின் கனவாக இருந்தது. அதை நினைவாக்கி காட்டி இருக்கிறார் ஜனனி. அந்த பிசினஸின் திறப்பு விழாவின் போது இடத்து ஓனர் பிரச்சனை செய்ததால், தடங்கல் ஏற்பட, இறுதியாக கடவுள் போல் வந்து உதவி இருக்கிறார் கலெக்டர் மதிவதினி. ஜனனி தரப்பில் நியாயம் இருப்பதால், இடத்து ஓனரை எச்சரித்து, எதாச்சும் வாலாட்டுன உள்ள தூக்கி போட்ருவேன் என மிரட்டியதோடு, கடை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
குணசேகரனுக்கு பல்பு கொடுத்த விசாலாட்சி
கடை திறப்பு விழாவுக்காக விசாலாட்சியை அழைக்க சக்தி வீட்டுக்கு வருகிறார். ஆதி குணசேகரனின் எமோஷனல் பிளாக்மெயிலுக்கு பயந்து விசாலாட்சி அந்த கடை திறப்பு விழாவுக்கு செல்ல மாட்டார் என்கிற மிதப்பில் அறிவுக்கரசி இருக்க, சக்தி வந்து கூப்பிட்டதும் டிப் டாப்பாக கிளம்பி காரில் செல்கிறார். இதையடுத்து ஆதி குணசேகரனுக்கு போன் போடும் அறிவுக்கரசி, உங்க அம்மா பெரிய அன்னை ஓர் ஆலயம்னு நினைச்சிட்டு இருந்தீங்கள்ல, அது உங்க மூஞ்சில கரி அள்ளி பூசிட்டு, அந்த கடை திறப்பு விழாவுக்கு போய்கிட்டு இருக்கு என சொல்கிறார். இதைக்கேட்ட குணசேகரன் கோபமடைகிறார்.
34
சோலியை முடிக்க சொன்ன குணசேகரன்
பின்னர் கடை திறப்பு விழா நடைபெறும் இடத்துக்கு சென்றதும், உங்கள் கையால் குத்து விளக்கு ஏற்றி தான் இந்த பிசினஸை தொடங்கி வைக்க வேண்டும் என ஜனனி சொல்ல, அதற்கு விசாலாட்சி, முதலில் சாமிக்கு பூஜை பண்ணிட்டு, அப்புறம் வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என சொல்கிறார். இதையடுத்து கதிரிடம் பேசும் ஆதி குணசேகரன், அங்கு இருக்கும் நம்ம பயலுகளுக்கு போனை போட்டு சோலிய முடிச்சி விடு என உத்தரவிடுகிறார். பின்னர் கதிரும் தான் செட் பண்ணிய போதை ஆசாமி ஒருவனை கடை திறப்பு விழாவிற்கு சென்று, பாம் வீசி சோலியை முடிக்க சொல்கிறார்.
பிசினஸை வெற்றிகரமாக தொடங்க உதவிய கலெக்டர் மதிவதினி தான் முதல் ஆளாக சாப்பிட்டு வியாபாரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஏராளமானோர் சாப்பிட வந்ததால் ஜனனி நிம்மதி அடைகிறார். அந்த நிம்மதி ரொம்ப நேரத்திற்கு நீடிக்கவில்லை. கதிர் அனுப்பிய ஆள், ஜனனியின் கடைக்கு சப்பிட வருவது போல் வந்து, பையில் இருந்து ஒரு பொருளை எடுக்கிறார். அப்போது ஜனனி மட்டும் ஃபுட் டிரக்கில் தனியாக இருக்கிறார். அந்த நபர் பையில் வைத்திருந்த பாமை எடுத்து ஃபுட் டிரக் மீது வீசினாரா? ஜனனிக்கு என்ன ஆச்சு? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.