பாசத்தில் ஓடோடி வந்த தம்பி; கட்டிப்பிடித்து அழுத கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய ஹைலைட்ஸ்!

Published : Dec 30, 2025, 09:44 PM IST

Gomathi Palanivel Emotional Bonding Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 676ஆவது எபிசோடில் தனது அக்காவின் குடும்பத்தை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தெரிந்து பழனிவேல் ஸ்டேஷனுக்கு ஓடோடி வந்துள்ளார்.

PREV
111
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 676ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம். சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் அண்ணே எங்க குடும்பத்தின் நிலைமைய பார்த்தீயா? எங்க கொண்டு வந்து நிற்க வைத்துவிட்டது என்று கூறி கோமதி கதறி அழுதார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகால பகையை மறந்த சக்திவேல் தனது தங்கைக்கு ஒன்று என்றதும் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். மேலும், கோமதியின் கையை பிடித்து அழுதார்.

211
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட் முத்துவேல் கோமதி

ராஜீயும் தனது அப்பாவை கட்டிப்பிடித்து அப்பா, பயமாக இருக்கிறது. காப்பாத்துங்க என்று கூறி கதறி அழுதார். அதன் பிறகு அரசி சின்ன பொண்ணு அவ என்ன பண்ணுணா, அவளை எதுக்கு ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்று கூறி அழுதார். இதையடுத்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் இன்ஸ்பெக்டரை பார்த்து பேசினர். அப்போது இன்ஸ்பெக்டரிடம் விசாரணைக்கு கூட்டிகொண்டு கோமதி எங்களுடைய தங்கச்சி.

311
தங்கமயில் தனது அம்மாவைக் காப்பாற்றப் புதிய நாடகம் ஆடுவாரா?

ஏன் மேடம், பெண்களை வீட்டில் வைத்து விசாரிக்க கூடாதா? நீங்கள் உடனே விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று சக்திவேல் சொல்லவே, வரதட்சணை மற்றும் Domestic Violence சும்மா ஒன்றும் கிடையாது, பாதிக்கப்பட்டவரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கினால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பேசியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

411
அக்கா - தம்பி பாசத்துக்கு முன்னாடி பகையெல்லாம் தூசு!

இதுவரையில் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை மட்டும் மேற்கொள்ள இருக்கிறோம். நீங்களும், அவர்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும். அதனால் நீங்கள் இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள் என்றார். இதைத் தொடர்ந்து தங்கமயிலை சம்மதிக்க வைக்க வீட்டிற்கு வந்த பாக்கியம், விவாகரத்து கொடுக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செஞ்சாச்சு.

511
மாமியார் வீட்டு ஆட்கள் மீது புகார்

போலீஸ் ஸ்டேஷனில் உன்னுடைய மாமியார் வீட்டு ஆட்கள் மீது புகார் கொடுத்திருக்கிறோம். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உன்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டிருக்கிறார்கள். இப்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு மானம்,ரோஷம் எல்லாம் இருக்கிறது. அதனால் கைது செய்யப்படுவதற்கு பயந்து உன்னுடன் வாழ சம்மதித்து வீட்டிற்கு வந்து நாங்கள் பண்ணுனது தப்பு தான் என்று சொல்ல் கூட்டிக் கொண்டு செல்வார்கள் என்றார். மொத்த குடும்பமும் இப்போது ஸ்டேஷனில் தான் இருக்கிறது. ஆனால், தங்கமயிலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இப்படியெல்லாம் செய்தால் இனி ஜென்மத்துக்கும் அவர்கள் என்னை கூட்டிக் கொண்டு போகமாட்டாங்க. நீ புகாரை வாபஸ் வாங்கு. நான் அவர்கள் கையில், காலில் விழுந்தாவது சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறி கதறி அழுதார்.

611
Pandian Stores 2 Serial

ஏற்கனவே அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இப்போது புகார் வேறு கொடுத்துருக்கீங்க. அதனால், என் மீது கோபம் தான் அதிகமாகும். உடனே கிளம்பி போங்க, கொடுத்த புகாரை வாபஸ் வாங்குங்க என்றார். போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தால் என்னை எப்படி அந்த குடும்பத்தில் வாழ விடுவாங்க என்று தங்கமயில் சொல்ல, ஜெயிலுக்கு போறது எல்லாம் அந்த குடும்பத்தால் நினைத்து கூட பார்க்க முடியாது. அதனால், அது நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், அவர்கள் நம்மிடம் தான் வர வேண்டும். அப்போது புகாரை வாபஸ் வாங்குங்க என்று சொல்லுங்க. நாமும் பதிலுக்கு விவாகரத்து நோட்டீசை வாபஸ் வாங்கு என்று சொல்வோம்.

711
Vijay TV Serial Pandian Stores Season 2 Updates

அதன் பிறகு பிரச்சனை சரியாகிவிடும். ஆடும் மாட்டை ஆடி கறக்க வேண்டும், பாடும் மாட்டை பாடி கறக்க வேண்டும், அவர்கள் வழியில் சென்று தான் அவர்களை மடக்க வேண்டும் என்றார். மேலும், புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றால், அந்த விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டுவிட்டு இந்த வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்திரு என்று பிளாக்மெயில் செய்யவே, அய்யோ என்னால் என்னுடைய புருஷன் இல்லாமல் இருக்க முடியாது என்று மயில் சொன்னார்.

811
Muthuvel helps Gomathi and Pandian Family

ஏற்கனவே நாம் பொய் சொன்னதால்தான் இந்த நிலை, இப்போது பொய் கம்ப்ளைண்ட் வேறு கொடுத்திருக்கிறோம். அது ரொம்பவே தப்பு. கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கு அம்மா என்று கூறி கதறினார். இப்படியே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக மயில் சரி நான் இப்போது என்ன செய்ய வேன்டும் என்று கேட்க, ஸ்டேஷனிலிருந்து வந்து கேட்டால் ஆமாம், வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துனாங்க, வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டாங்க. இப்போது விவாகரத்து நோட்டீஸ் வேறு அனுப்பியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

911
Pandian Stores 2 Serial Latest Twist Tamil

இது தான் கடைசி பொய். இதை மட்டும் நீ சொன்னால் இனிமேல் நாம் பொய் சொல்ல வேண்டிய சூழல் வராது. உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் சொல்வதை கேள். நீயே யோசிச்சு ஒரு முடிவுக்கு வா என்று சொல்லிவிட்டு பாக்கியம் தனது அறைக்கு சென்றார். தங்கமயிலுக்கு சுடர் ஐடியா கொடுக்க நினைக்கும் நிலையில் அவரையும் பாக்கியம் உள்ளே கூட்டிச் சென்றார்.

இதையடுத்து குமரவேல் காந்திமதி கடைக்கு வந்து பழனிவேலுவிடம் நடந்த எல்லா உண்மையும் சொல்லவே பழனிவேல் பதறிப்போனார். அய்யயோ நம்ம குழியவே கெடுத்துட்டு போயிட்டாங்களே என்று பழனிவேல் கதறினார். கடைசியாக இரு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்கு புறப்பட்டார். குமரவேலுவிற்கு அரசி மற்றும் ராஜீ மீது பாசம் ஏற்படவே அவர்களுக்காக பரிதாப்பட்டார். எப்படியாவது அத்தை, ராஜீ மற்றும் அரசி ஆகியோரை வெளியில் கொண்டு வர முயற்சி செய்றாங்க என்றார்.

1011
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட் முத்துவேல் கோமதி

கடைசியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியில் நின்று பேசினர். இதில் நான் ஒரு பைத்தியக்காரன். நானே ஐடியா கொடுத்துவிட்டேன். கோபத்தில், பாண்டியனை பழி வாங்க, அசிங்கப்படுத்தவே இப்படி பேசினேன். ஆனால், இப்படி தங்கச்சி, ராஜீயை எல்லாம் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு வருவாங்க என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று ஃபீல் பண்ணினார். இதற்கு முத்துவேல் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் பேச வேண்டும். இனிமேலாவது பொறுமையா இரு என்றார்.

1111
Pandian Stores 2 Today Episode Gomathi Muthuvel

அப்போது பழனிவேல் வரவே, என்ன சொன்னால், கோமதி வீட்டு ஆளுங்க வெளியில் வர முடியாதோ அந்த புகார் கொடுத்து வச்சிருக்காங்க என்றார். சரி நீ போய் பாரு என்று சொல்லவே, அக்கா அக்கா என்று பழனிவேல் ஸ்டேஷனுக்குள் வரவே, அவரைப் பார்த்த கோமதி கட்டிப்பிடித்து கதறி அழுதார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories