கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி என்கிற சீரியலில் நாயகியாக நடித்த நந்தினி, தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைப்பற்றி அவரின் அம்மா பேட்டி அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை செய்துகொண்டது குறித்து அவரது தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். தனது மகளுக்கு முன் கோபம் அதிகம் என்றும், அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும், அரசு வேலைக்கு செல்லும்படி எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி என்கிற சீரியலில் நாயகியாக நடித்தவர் நந்தினி. கன்னட நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே இரட்டை கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து வந்தார்.
24
நந்தினி எடுத்த விபரீத முடிவு
இந்த நிலையில் நேற்று தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் நந்தினி. அவரின் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகை நந்தினி தற்கொலையால், விஜயநகரா மாவட்டம், சிகடேரியில் உள்ள அவரது இல்லத்தில் சோகம் நிலவுகிறது. மகளை நினைத்து தாய் கண்ணீர்மல்க பேட்டி அளித்துள்ளார். அதில், பெங்களூரில் நடிப்பு பயிற்சிக்கு சம்மதித்தேன். கணவர் இறந்தபின் கருணை அடிப்படையிலான வேலையை அவள் மறுத்தாள். பின்னர் அவளே வேலைக்குச் செல்வதாகக் கூறியபோது, நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.
34
நந்தினியின் தாய் சொன்னதென்ன?
சில நாட்கள் கழித்து, சீரியலில் நல்ல வாய்ப்புகள் வருவதால் அரசு வேலை வேண்டாம் என்றாள். அவளுக்கு கோபம் அதிகம். அவளது முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை. அவளைப் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தாய் வேண்டுகோள். நந்தினி தற்கொலை செய்துகொண்டதை கேட்டதும் இதயம் நொறுங்கியது. அவளை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை. காலை 10.45க்கு அறைக்கு வந்து, 11.15க்குள் இது நடந்துள்ளது என போலீசார் கூறினர்.
என் மகளைப் பற்றி தவறாக பேசாதீர்கள். அரசு வேலை விஷயம் 2 வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஊடகங்கள் தவறான செய்திகளை நிறுத்த வேண்டும். அவளுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அரசு வேலை பற்றி பேசியபோது என் நம்பரை பிளாக் செய்வதாக சொன்னாள். கடந்த 20 நாட்களாக பேசவில்லை. கோபம் அதிகம், அவசரத்தில் முடிவெடுத்துவிட்டாள். எந்த பெற்றோருக்கு தான் கவலை இருக்காது? என தாய் புலம்பினார்.